ஐ.டி. வல்லுனர்கள் காட்டில் மழை

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி,:கொரோனா தொற்று பரவலுக்கு பின் நிறுவனங்கள் டிஜிட்டல்மயமாவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஐ.டி. எனும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த தொழில் வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது.பலர் தற்போதைய நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் பணியாற்ற வருவதற்கு 70 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பல்வேறு
ஐ.டி.  வல்லுனர்கள் காட்டில் மழை

புதுடில்லி,:கொரோனா தொற்று பரவலுக்கு பின் நிறுவனங்கள் டிஜிட்டல்மயமாவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஐ.டி. எனும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த தொழில் வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது.


பலர் தற்போதைய நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் பணியாற்ற வருவதற்கு 70 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்க மறுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.


latest tamil news
பணியமர்த்தும் துறையில் உள்ள பல முன்னணி நிறுவனங்களின் ஆய்வறிக்கை வாயிலாக மேலும் தெரியவந்துள்ளதாவது:கொரோனாவுக்கு முன் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க தொழில் வல்லுனர்கள் வேறு நிறுவனத்துக்கு வருவதற்கு 15 முதல் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்த்தனர்.

ஆனால் இப்போது அவர்கள் 50 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.தற்போது கேமிங் ஆரோக்கியம் கல்வி செயற்கை நுண்ணறிவு இணைய பாதுகாப்பு என பல்வேறு வணிக பிரிவுகளில் அனுபவம்மிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே டி.சி.எஸ். உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமானோரை பணியமர்த்தி வருகின்றன. டி.சி.எஸ். நிறுவனம் ஜூன் காலாண்டில் மட்டும் 20 ஆயிரத்து 409 பேர்களை புதிதாக பணியமர்த்தி உள்ளது. இதுவும் தேவையை அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.அனுபவம் மிக்கவர்களுக்கு மட்டுமின்றி புதியவர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப துறையில் தேவைகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
b. venugopal - tiruchi,இந்தியா
20-ஜூலை-202115:10:44 IST Report Abuse
b. venugopal இன்ஜினியரிங் கல்லூரிகள் போனியாவதற்காக போடபட்ட செய்தி
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
14-ஜூலை-202112:29:53 IST Report Abuse
Sriniv Real estate prices will go up again. The IT boom post Covid is definitely there, and lots of people are switching jobs. Already prices are sky high in Chennai, and this increase will lead to prices becoming totally unaffordable.
Rate this:
RIN - ,
14-ஜூலை-202114:34:43 IST Report Abuse
RINThats the problem of focused on Chennai only till now....
Rate this:
Raj - chennai,இந்தியா
14-ஜூலை-202115:56:34 IST Report Abuse
RajGuys, please don't believe these type of new that IT company gave Hike and that too double hike. The actual reality is different. You can check with your friends. The cooperate has restructured the salary in such a way that the take home has reduced. IT people have made sure they will not go for new investment further (as far as I know in my circle). Better to keep the money in liquid form, because we will not know when we will die to the stress because of the recent work from culture. I am in this industry for last 20 years and I have no going back. But my advise to the young people there is a better option than IT. Keep this in mind - Slow and steady wins the race. Getting more more money in IT ( rumor) will lead you to many personal complications. Think Twice before you you future...............
Rate this:
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
14-ஜூலை-202111:18:28 IST Report Abuse
MANI DELHI மாடு மாதிரி உழைக்க இந்தியனை (குறிப்பாக தமிழனை) குறிவைக்கும் காரணம் குறைவான சம்பளம்.. ஏனென்றால் நமது வாழ்க்கை முறையை பணத்திற்காக மாற்றிவிட்டோம். ஏன் கொடுக்க மாட்டார்கள். மற்றநாடுகளின் நபர்கள் இந்த சம்பளத்தில் வேலை செய்ய மாட்டார்கள். இது தான் வெச்சு செய்வது. உயிரை மட்டும் விட்டு விட்டு மற்றதையெல்லாம் எடுத்துக்கொள்வதற்காக தான் இந்த சலுகைகள். இதை மழை என்று நினைத்தால் பின்னாலே ஜுரம் வரும் என்பதையும் நாம் மறக்கவேண்டாம்...
Rate this:
Raj - chennai,இந்தியா
14-ஜூலை-202116:00:57 IST Report Abuse
Raj200% true Mr.Mani. But there are people saying its a easy money in IT. There will be skeleton picture in the Cigar boxes. Going forward it will be seen in the offer letter issued by the IT companies. Most of the companies have taken Term Deposit on each of its employee, because they know the death rate has increased and they are not able to pay compensation. So they brought in the Insurance company to do the same. Company will claim it is securing the future but people on the ground knows the reality....
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-202106:41:08 IST Report Abuse
naadodiஅது என்ன //இந்தியனை (குறிப்பாக தமிழனை) குறிவைக்கும் காரணம்// எங்கு தகுதிகள் அதிகம் இருக்கோ அங்குதான் கம்பெனிகள் நோக்கும். இதில் ஒன்றும் தவறில்லை. If your skills are pretty current and in the areas of demand (data analytics, mobile technology, cloud enablement), naturally you can demand better salary. உழைத்தால் தான் பணம் பண்ண முடியும்.சாமர்த்தியமாக உழைத்த பணத்தை சேமிப்பவர் செல்வந்தர். இல்லையெனில் stress, tension என்று புலம்பும் பலரில் ஒருவர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X