ஒன்றியம் - கொங்கு நாடு விளையாட்டுக்கு முடிவு என்ன?

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (48) | |
Advertisement
'ஹ ஸ்கே லியா பாகிஸ்தான்' என, இந்தியாவை பிரித்த போது, பாகிஸ்தான் முஸ்லிம்கள் சொன்னார்கள். அதாவது, சிரித்துக் கொண்டே தனி நாடு பெற்றானராம். பின், 1971ல் பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் உருவானது. என்றாலும், இந்தியாவை பிரிப்பது சுலபம் என்ற எண்ணம், 1947-ல் இருந்தே பரவலாக காணப்பட்டது உண்மை. வெளிநாட்டு பத்திரிகைகளும் அப்படி சொல்லி வந்தன.'திராவிட நாடு தான், நம் லட்சியமே தவிர, அதற்கு
 ஒன்றியம், கொங்கு நாடு

'ஹ ஸ்கே லியா பாகிஸ்தான்' என, இந்தியாவை பிரித்த போது, பாகிஸ்தான் முஸ்லிம்கள் சொன்னார்கள். அதாவது, சிரித்துக் கொண்டே தனி நாடு பெற்றானராம். பின், 1971ல் பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் உருவானது. என்றாலும், இந்தியாவை பிரிப்பது சுலபம் என்ற எண்ணம், 1947-ல் இருந்தே பரவலாக காணப்பட்டது உண்மை. வெளிநாட்டு பத்திரிகைகளும் அப்படி சொல்லி வந்தன.'திராவிட நாடு தான், நம் லட்சியமே தவிர, அதற்கு குறைந்த எதிலும் திருப்தி அடைய மாட்டோம், ஓய மாட்டோம், கிளர்ச்சி செய்தே தீருவோம் என்பதை காட்ட, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர திருநாள் என்னும்,'ஆரியர்-பனியா' ஏமாற்று திருவிழாவில், நாம் பங்கேற்க போவதில்லை' என்று ஈ.வெ.ரா., ௧௯௪௭ ஆகஸ்ட், ௬ம் தேதி 'விடுதலை' பத்திரிகையில் எழுதினார்.latest tamil newsஏற்க முடியாது


இந்திய கம்யூனிஸ்டு கட்சி, 'யே ஆஸாதி ஜூட்டா ஹை' (இந்த சுதந்திரம் பொய்யானது) என, முழங்கிக் கொண்டிருந்தது. தி.மு.க., 1963 வரையில் பிரிவினை முழக்கம் எழுப்பியது. வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் நடந்தது அனைவருக்கும் தெரியும். இந்திய ஒற்றுமை என்பது, பல தடைகளைத் தாண்டியே பயணித்து வருகிறது என்பதை சுட்டிக் காட்டவே, இந்த வரலாறு நினைவூட்டல். இந்தப் பின்னணியில் தான், 'ஒன்றியம்' என்ற புது முழக்கத்தையும், 'கொங்கு நாடு' செய்தியையும் நோக்க வேண்டும்.இந்திய ஒற்றுமையை எதிர்த்து, தி.மு.க., தலைமை ஏதும் பேசவில்லை. மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் என்ற எண்ணத்தில், இந்தியா ஓர் ஒன்றியம் என்று சொல்வதாக கூறும் தி.மு.க., இந்தியா பிரிக்க முடியாத நாடு என்ற, அடித்தளத்தின் மீது தான் ஒன்றியம் இருக்கும் என்பதையும் ஏற்கிறது. எனவே, ஒன்றியம் என்று சொல்வது, தி.மு.க., மீண்டும் பிரிவினை பாதையை தேர்ந்தெடுத்து விட்டதன் குறியீடு என்று, சிலர் கூறுவதை ஏற்க முடியாது.அதே சமயம், 'ஜெய்ஹிந்த்' என்று சொல்வது, முதல்வருக்கு பிடிக்கவில்லை என்று அமைச்சர் பொன்முடி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. வடசொல் என்பதனால் பிடிக்கவில்லையா அல்லது, 'இந்தியா வாழ்க' என்று பொருள்படுவதால் பிடிக்கவில்லையா என்பதை, தி.மு.க., தெளிவுபடுத்த வேண்டும். காங்கிரசுக்கு, இந்திய ஒற்றுமை மீது அக்கறை இருந்தால், பொன்முடியின் பேச்சுக்கு விளக்கம் கேட்க வேண்டும்.'ஒன்றியம்' என்ற சொல்லுக்கு எதிர்வினையாக, 'கொங்கு நாடு' என்ற சொல்லாடல் வந்ததாக பலரும் கருதினர். ஆனால், 'தினமலர்' நாளிதழ் செய்தி அதை அடியோடு புரட்டிப் போட்டது.இனி யாரும் கொங்கு நாடு என்ற சொல்லை, வேடிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இதை கொங்கு மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை என்று கருத முடியாது. ஏனெனில், கொங்கு மக்கள் தம்மை தமிழகத்தில் இருந்து பிரித்துப் பார்க்கவில்லை.
மகிழ்ச்சி அடைவர்


தெலுங்கானாவிற்கும், ஆந்திராவிற்கும் இடையே இருந்த விரிசல் வரலாறு பூர்வமானது. 1948 வரை நிஜாமின் ஆளுகையில் இருந்தது தெலுங்கானா. அது போன்ற எந்த விரிசலும், தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கும், மற்றைய பகுதிகளுக்கும் இடையே இருந்ததில்லை.நிர்வாக ரீதியாகவும், தமிழகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். எனவே, தி.மு.க.,வின் ஒன்றிய விளையாட்டிற்கு, எதிர் விளையாட்டாக இதை நடத்த, மத்திய அரசு முடிவு செய்து விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. அது உண்மையென்றால், விளையாட்டு விபரீதமாகி விடும்.தமிழகத்தின் ஒரு பகுதியைப் பிரித்து, மத்திய அரசின் கீழ் கொண்டு வர முயன்றால், அதனால் ஏற்படும் போராட்டம் பிரிவினைவாதிகளுக்கு வலு சேர்க்கும் என்பதை, மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும். பிரதமர் மோடிக்கும், தனக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாக ஸ்டாலினே சொல்லியிருக்கிறார்.எனவே பிரதமரே முதல்வரை அழைத்து, ஒன்றியம் போன்ற விளையாட்டுகளை மாநில அரசு ஒரு நிலைக்கு மேல் எடுத்துச் சென்றால், மத்திய அரசும் பெருமளவில் விளையாட முடியும் என்பதை சொல்ல வேண்டும்.தமிழகத்தின் முன்னேற்றமே முக்கியம் என்பதால், பிரதமரின் ஆலோசனையை ஸ்டாலின் புறந்தள்ள மாட்டார். ஒன்றியம், -கொங்குநாடு விளையாட்டிற்கு இருவரும் சேர்ந்து முற்றுப்புள்ளி வைத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
19-ஜூலை-202101:49:52 IST Report Abuse
M  Ramachandran . என்றைக்கு மில்லா இந்த ஒன்றிய பிரச்சனை தீ மு க்கா ஆட்சி க்கு வந்ததும் தான் தொடங்க பட்டுள்ளவது. காமராஜர் காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் ஒரு வேளாண் மாவட்டமாக அறிவிக்க பட்டது. அலகு தொழிற் சாலைகளோ அல்லது பெரும் கட்டடங்களோ அக்காட்ட தடை விதிக்க பட்டிருந்தன. ஆனால் என்ன நடந்தது அவருக்கு பின் வந்த அரசுகள் தஞ்சை (யை) மாவட்டத்தில் பல தனியார் தோழில் நுட்ப கல்லூரிகள் தனியார் பாள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் வந்து விட்டானா. பல விவசாய நிலங்கள் கஜூவியிருப்புகளாக மாறி வருகிறது. கோனை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்கள் இயற்கையிலேயே ஆங்கிலேயர்கள் அரசாட்சியின் போனதிலிருந்தேனா தோழி நகரமாகி இருந்தது. பின்னர் பல நெருக்கடிகளால் கோவையில் பல மில் கல் மூட பட்டன.தனியார் பங்களிப்பு கோவை திருப்பூரில் அதிகம். இரோடு மாவட்டம் அதன் சுற்ரி உள்ள பகுதிகள் விவசாயம் மற்றும் நெசவு தொழில் அதிக மாக இருக்கிறது. மேற் கூறிய மாவாட்டங்களிலே அரசு பங்களிப்பு சிறிதளவே.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
18-ஜூலை-202114:39:59 IST Report Abuse
bal இரண்டுமே தேவையில்லாத ஒன்று..மக்களுக்கு ஒரு நன்மையும் ஆகப்போவதில்லை.
Rate this:
Cancel
Ananth - KONGU MANDALAM TAMIZHAGAM INDIA SEYCHELLS,செசேல்ஸ்
17-ஜூலை-202101:21:20 IST Report Abuse
Ananth 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பொது, சென்னை மாகாணம் (Madras Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிர்வாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பிரதேசம், இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை. ஆந்திர மாநிலம் கேரளா மாநிலம் கர்நாடக மாநிலம் இவை உருவான நாள். 1 ST NOVEMBER 1956. பிரித்தது போக மீதியுள்ள பகுதி சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே தொடர்ந்தது. பின்னாளில் தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்ய பட்டது(1967 ல்). அப்போதும் கோடை கால தலைநகராக உதகமண்டலம் விளங்கியது. பின்னாளில் அந்த வழக்கம் கைவிடப்பட்டு சென்னையே தூக்கி பிடிக்கப்பட்டது. இதை ஏன் செய்தார்கள். உதகமண்டலம் கோடை கால தலைநகராக இருந்திருந்தால் அந்த பகுதியும் வளர்ச்சி பெற்று இருக்குமே. இதனை ஏன் செய்தார்கள், 1967 க்கு பின் ஆண்ட திராவிட அரசியல் வாதிகள்? இதை தொடர்ந்து இருந்தாலே இன்றைய கொங்கு மண்டல பிரச்னை வந்திருக்காதே. அத்தனையும் சென்னைக்கே கொண்டு சென்றார்கள். திராவிட அரசியல்வாதிகளை மீறி கொங்கு பகுதி தானாக வளர்ந்தது. தமிழகம் ஆண்ட திராவிட அரசியல் வாதிகள் ஒன்றையும் செய்யவில்லை என்பதே உண்மை. BHEL(திருச்சி), ஆவடி TANK தொழிற்சாலை, Integral Coach Factory (ICF) ரயில்வே, போன்ற எந்த பெரிய அரசு நிறுவனங்களும் பாண்டிய மண்டலத்திலோ, சோழ மண்டலத்திலோ, கொங்கு மண்டலத்திலோ பெரிய அளவில் தொடங்க படவில்லை என்பதே உண்மை. இவை அனைத்தும் 1967 க்கு முன் தொடங்கப்பட்டவை. கொங்கு மண்டலம் அப்பகுதி மக்களின் உழைப்பு, தனியார் பங்களிப்பிலேயே வளர்ந்தது. பாண்டிய மண்டலமோ இன்று வரை மோசம். இந்தியாவிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதை கடைசியாக இருந்தது பாண்டிய சோழ மண்டலத்தில்தான். இத்தனைக்கும் இந்திய நிதி அமைச்சர் பதவியை குறைந்தது 10 ஆண்டு காலம் அலங்கரித்தவர் அந்த பகுதிக்காரர்தான். அவர் ஒன்றும் செய்யவில்லை. பாண்டிய மண்டலமும் சோழ மணடலமும் அதிகமான இந்து கோவில்களை உடைய பகுதி. அவற்றை ஆன்மீக சுற்றுலா பகுதிகளாக வளர்த்திருந்தாலே, அப்பகுதிகள் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும். அதாவது மதுரை மீனாட்சி அம்மன், பழனி முருகன், கன்னியாகுமரி பகவதி அம்மன், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவாரூர் தியாகேசர், கும்பகோணம் கும்பமேளா, தஞ்சை பிரகதீஸ்வரர், திருச்செந்தூர் முருகன், ராமேஸ்வரம், குலசை முத்தாரம்மன் தசரா விழா, திருவண்ணாமலை கிரி வலம்(இன்னும் சொல்லி கொண்டே போகலாம்) இவைகளை பிரபலப்படுத்தி, வடநாட்டு யாத்திரை புண்ய பகுதிகளைவிட மிக சிறப்பான ஆன்மீக சுற்றுலா தலங்களாக உருவாக்கி இருக்க முடியும்.(திருப்பதி, சபரிமலை போல புண்ணிய பகுதிகளாக அறிவித்து இருந்தாலே இவை மிக பெரிய ஆன்மீக சுற்றுலா பகுதிகளாக உருவாகியிருக்க முடியும்). ஆன்மீக சுற்றுலா மூலம் சோழ, பாண்டிய மண்டலங்கள் மிக பெரிய வளர்ச்சியை தானாகவே அடைந்திருக்கும் கடந்த 50 வருடங்களில், திருப்பதியும், சபரிமலையும், மிக பெரிய வளர்ச்சி மற்றும் வருமானத்தை கொண்ட ஆன்மீக தலங்களாக உருவாகியுள்ளன. இதற்கு காரணம். அந்த பகுதி ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு. மற்றும் அந்த கோவில்களை வாரியங்களாக உருவாக்கி இந்து தெய்வ நம்பிக்கை உள்ள நபர்களிடம் ஒப்படைத்தது. ஆனால் இங்கே என்ன நடந்தது. பகுத்தறிவு என்ற போர்வையில் இந்து கோவில்களின் வளர்ச்சியை தடுத்து மற்ற மதங்களின் வளர்ச்சிக்கு துணை போனார்கள் திராவிட ஆட்சியாளர்கள். கோவில்களை, இந்து நம்பிக்கை உள்ளவர்களிடம் நிர்வாகத்தை(மற்ற மத ஆலய மசூதி நிர்வாகம் போல) கொடுத்து இருந்தாலே இந்த மண்டலங்கள், ஆன்மீக சுற்றுலா தலங்களாக வளர்ச்சி அடைந்திருக்கும். தமிழக அரசு கோவில்களை வரைமுறைப்படுத்தும் வேலையை மட்டும் செய்து இருந்தாலே போதும். இந்து கோவில்களுக்கு முன்னால் ஈ வே ரா வின் சிலையை வைத்து இந்து கோவில்களை கேவலப்படுத்தும் வேலையை மட்டுமே செய்தார்கள் திராவிட ஆட்சியாளர்கள். அது மட்டும் அல்ல இந்து கோவில் வளங்களை சூறையாடினார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.(சாமி இல்லை ஆனால் சாமிகோவில் வருமானம் மட்டும் பகுத்தறிவு அரசாங்கத்திற்கு வேண்டும்.). இப்படி செய்தால் எப்படி வரும் வளரச்சி. அதனாலேயே கொங்கு சோழ பாண்டிய பல்லவ மண்டல சிந்தனை, மக்களுக்கு வந்துள்ளது............ இன்னுமொரு தகவல் தமிழ் மக்களின் சிந்தனைக்கு நான்கைந்து இந்தி பேசும் மாநிலங்கள் உள்ளன. தெலுங்கு பேசும் மாநிலம் இரண்டாக உள்ளது. இதனால் தெலுங்கோ இந்தியோ அழிந்து விடவில்லை. இன்னும் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டுதான் உள்ளது. தமிழும், தமிழ் மக்களும் நான்கு மாநிலங்களாக இருந்தால் போட்டி போட்டுக்கொண்டு(ஆந்திரா தெலுங்கானா போல) நன்றாகத்தான் வளர்வார்கள். நிர்வாக வசதிக்காக எப்படி மாவட்டங்களை பிரித்தோமோ அது போலத்தான் இதுவும். மாவட்டங்களை பிரித்தது நிர்வாக வசதிக்கு சரி என்றால், நிர்வாக வசதி மற்றும் வளர்ச்சிக்காக மாநிலங்களை பிரிப்பதும் சரியே. அம்பேத்கார் அவர்களும் 2 கோடி பேருக்கு ஒரு மாநிலம் பிரிப்பது நிர்வாகத்துக்கு நல்லது என்றே கூறி உள்ளார். ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் வளர்க பல்லவ மண்டலம் வளர்க சோழ மண்டலம் வளர்க கொங்கு மண்டலம் வளர்க பாண்டிய மண்டலம் வெல்க தமிழ் மற்றும் தமிழக மக்கள் பாரத் மாதா கி ஜெய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X