அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை முதல் சென்னை வரை அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்க திட்டம்

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: தமிழக பா.ஜ., தலைவராக, 16ம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்கிறார். அதற்காக, இன்று கோவையில் இருந்து, சாலை மார்க்கமாக சென்னை வரும் அண்ணாமலைக்கு, வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு அளிக்க, அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.தமிழக பா.ஜ., தலைவராக இருந்த முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், தலைவர் பதவிக்கு, துணை தலைவராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலையை,
Tamilnadu, BJP, Annamalai, பாஜக, தலைவர், அண்ணாமலை, வரவேற்பு

சென்னை: தமிழக பா.ஜ., தலைவராக, 16ம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்கிறார். அதற்காக, இன்று கோவையில் இருந்து, சாலை மார்க்கமாக சென்னை வரும் அண்ணாமலைக்கு, வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு அளிக்க, அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், தலைவர் பதவிக்கு, துணை தலைவராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலையை, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அவர், சென்னை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில், 16ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக அண்ணாமலை, கோவையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னை வருகிறார்.


latest tamil news


அதன்படி, இன்று கோவையில் இருந்து புறப்படும் அண்ணாமலைக்கு, பல்லடம், திருப்பூர், பெருந்துறை என வழிநெடுக, கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இரவு திருச்சியில் தங்கும் அவர், நாளை திருச்சியில் இருந்து சென்னை கிளம்புகிறார். பெரம்பலுார், விழுப்புரம், செங்கல்பட்டு என வரவேற்பை பெறும் அண்ணாமலை, இரவு தாம்பரத்தில் தங்குகிறார்.

நாளை மறுநாளான, 16ம் தேதி, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு,பல்லாவரம், ஆலந்துார், சைதாப்பேட்டை வழியாக, மதியம், தி.நகரில் உள்ள கமலாலயம் வருகிறார். அங்கு பிற்பகல், 2:00 மணிக்கு, தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் முருகன், தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-ஜூலை-202113:10:27 IST Report Abuse
அசோக்ராஜ் பயணம் முழுக்க எல்லா வாகனங்களும் எந்த டோல்கேட்டிலும் காசு குடுக்காம சென்னை சென்று சேரணும். அப்போதான் பெரியார் மண்ணில் தாமரை மலர்ந்தாச்சுன்னு அர்த்தம்.
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
14-ஜூலை-202112:55:16 IST Report Abuse
PKN அருமையான வாய்ப்பு கோட்டை விட்டுவிடாதீர்கள் கோவையில இருந்து சென்னை கமலாலயம் வரை 460KM சாலை முழுவதும் மலர்களை தூவி 1/2 அடி உயரத்திற்கு மெத்தை போல் அமைத்து அவரை அழைத்து வாருங்கள் சாலை முழுவதும் தோரணவாயில் கட்டுங்கள் ஆங்காஙகே நாதஸ்வரம் பேண்ட் வாத்தியங்களை முழங்க விடுங்கள் இதை பார்த்து மிரண்டு திராவிட கட்சியினர் ஓடி ஒதுங்க வேண்டும்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூலை-202111:44:12 IST Report Abuse
Pugazh V மாஸ்க் இடைவெளி எதுவும் வேண்டாம். தமிழ் நாட்டில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவது பாஜக விற்கு பொறுக்காதல்லவா? பாஜக இங்கே 3 ஆவது அலை துவக்கியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X