இதெல்லாம் வழக்கமான உத்தரவு தானே. இதற்கே பாராட்டா...

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
எஸ்.சி., - எஸ்.டி., மீதான அட்டூழியங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறு, போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்'இதெல்லாம் வழக்கமான உத்தரவு தானே; இதற்கே பாராட்டா...' என, கேட்கத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.விக்னேஷ் என்ற மாணவர்,
இதெல்லாம் வழக்கமான உத்தரவு தானே. இதற்கே பாராட்டா...

எஸ்.சி., - எஸ்.டி., மீதான அட்டூழியங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறு, போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'இதெல்லாம் வழக்கமான உத்தரவு தானே; இதற்கே பாராட்டா...' என, கேட்கத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.


விக்னேஷ் என்ற மாணவர், லண்டன் சென்று படிக்க, 18 லட்சம் ரூபாய் உதவி கேட்டார். நான் தனியாக, 5 லட்சம் ரூபாய் கொடுக்க உறுதியளித்துள்ளேன். எட்டு லட்சம் ரூபாயை, 400 பேரிடம் தலா, 2,000 ரூபாய் வீதம் வாங்கி, 8 லட்சம் ரூபாய் சேர்த்தாகி விட்டது!
- தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார்


'உங்களை போல தி.மு.க.,வின் எல்லா எம்.பி.,க் களும், மக்கள் பிரதிநிதிகளும் இப்படி செயல்படுவரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார் அறிக்கை.


நடந்து முடிந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், திருச்சியை சேர்ந்த, மலை வாழ் மக்களுக்காக போராடிய ஸ்டேன்ஸ் சுவாமிக்கு, இரங்கல் தீர்மானம் போட வேண்டும் என சிலர் வலியுறுத்தியும் மறுத்தது ஏன்?
- தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்


'இரங்கல் தீர்மானம் போட்டால் மட்டும் போதுமா; அது தான் அவருக்கு தெரிவிக்கும் நன்றிக்கடனா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.


நாடும், ஏடும் போற்றிய கருணாநிதி ஆட்சியின் விளைவு, 22 அமைச்சர்கள் மீதான, 83 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெளிப்படையான ஆட்சி என்று சொன்னால் போதாது. இந்த வழக்குகளில் எவ்வித தலையீடும் இருக்காது என்பதை தெளிவுபடுத்துவாரா?
- தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்


'பத்தாண்டுகளாக அந்த வழக்குகள் தீர்க்கப்படவில்லையா; அ.தி.மு.க., அரசு என்ன செய்து கொண்டிருந்தது...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.


நடிகர் ரஜினிகாந்த், 'இனி எக்காலத்திலும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை' என்றும், ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக அவரை மையப்படுத்தி வெளிவந்த செய்திகளுக்கு முடிவு கட்டியிருக்கிறார்.
- தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா


latest tamil news




'அடுத்த படம் வெளிவந்தால், அப்போதும் ரசிகர் மன்றங்களை அழைத்து ஆலோசனை நடத்தி தான் முடிவு செய்வார்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை.


கட்சி தொண்டர் ஒருவர், தோளில் கை போட முயன்றதற்காக, அவரை தாக்கியுள்ளார், கர்நாடகா காங்., தலைவர் சிவகுமார். ஆனால், பா.ஜ., தொண்டர் தோளில் கைபோட்டு மகிழ்ச்சியாக பேசி சிரிக்கிறார், கர்நாடகா பா.ஜ., அமைச்சர். இது தான் காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே உள்ள வேற்றுமை.
- தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி


'இடுப்பில் கை வைத்ததற்காக அடித்த சிவகுமார், துப்பாக்கி, கத்தி எதையும் இடுப்பில் மறைத்து வைத்திருந்திருப்பாரோ...' என, சந்தேகம் கிளப்ப தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி அறிக்கை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
14-ஜூலை-202121:55:05 IST Report Abuse
GANESUN சிம்பு+சந்தானம் .., காமடி ஞாபகம் வந்தது.,
Rate this:
Cancel
sridharan - chennai,இந்தியா
14-ஜூலை-202113:54:20 IST Report Abuse
sridharan சும்மாவா அஞ்சு வருஷத்துக்கு மாதம் , லக்ஷ ருபாய் சம்பளத்துடன் பல சலுகைகள், இதற்கு வழி செய்தவருக்கு பாராட்ட வேண்டாமா அதற்கெல்லாம் சந்தர்ப்பம் பார்க்க காத்திருந்தாள் , யாராவது முந்திக்கொண்டால்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-ஜூலை-202113:22:31 IST Report Abuse
பாமரன் PLEASE CHANGE YOUR LOCATION
Rate this:
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
14-ஜூலை-202117:07:09 IST Report Abuse
shaktiயாருக்கு சிக்னல் கொடுக்கிறார் இவர் ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X