இந்தியாவில் இறங்குமுகத்தில் தினசரி கோவிட் உயிரிழப்பு| Dinamalar

இந்தியாவில் இறங்குமுகத்தில் தினசரி கோவிட் உயிரிழப்பு

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | |
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், தினசரி கோவிட் உயிரிழப்பும் 624 ஆக குறைந்தது.கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 38,792 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3 கோடியே 09 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்தது. ஒரேநாளில் 41,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், தினசரி கோவிட் உயிரிழப்பும் 624 ஆக குறைந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 38,792 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3 கோடியே 09 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்தது.

ஒரேநாளில் 41,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 01 லட்சத்து 04 ஆயிரத்தை தாண்டியது. 4.29 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதித்த 624 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,11,408 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.28 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.39 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


இந்தியாவில் இன்று (ஜூலை 14) காலை 8 மணி நிலவரப்படி 38.76 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 37,14,441 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news





பரிசோதனைகள்


இந்தியாவில் நேற்று (ஜூலை 13) ஒரே நாளில் 19,15,501 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 43 கோடியே 59 லட்சத்து 73 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news





உலக பாதிப்பு

இன்று (ஜூலை 14ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 18 கோடியே 86 லட்சத்து 16 ஆயிரத்து 093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சத்து 65 ஆயிரத்து 804 பேர் பலியாகினர். 17 கோடியே 24 லட்சத்து 35 ஆயிரத்து 944 பேர் மீண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X