24 ஆண்டு... 5 லட்சம் கி.மீ., பயணம்: கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த சீன தந்தை

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (21)
Advertisement
பீஜிங்: சீனாவைச் சேர்ந்த ஒருவர், 2 வயதில் கடத்தப்பட்ட தன் மகனை 24 ஆண்டுகளாக, 20 மாகாணங்களில் 5 லட்சம் கி.மீ., பயணம் செய்து தேடிக் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன், வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது இரு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டான். போலீசார் அந்த

பீஜிங்: சீனாவைச் சேர்ந்த ஒருவர், 2 வயதில் கடத்தப்பட்ட தன் மகனை 24 ஆண்டுகளாக, 20 மாகாணங்களில் 5 லட்சம் கி.மீ., பயணம் செய்து தேடிக் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.



latest tamil news




கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன், வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது இரு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டான். போலீசார் அந்த கடத்தல்காரர்களை கைது செய்தனர். ஆனால், குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் மகனை தானே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த குவோ கேங்டாங், தன்னிடம் இருந்த பணத்தில் ஒரு பைக் வாங்கி, ஒவ்வொரு மாகாணமாக சென்று தேடினார். கையில் இருந்த மொத்த பணமும் தீர்ந்து போன நிலையில் தனது பயணத்தை தொடர்வதற்காக அவர் பிச்சையும் எடுத்துள்ளார்.


latest tamil news




இந்த பயணத்தின் போது பலமுறை விபத்துக்குள்ளாகி அவரது எலும்புகள் முறிந்துள்ளன. வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கி பணம் உள்ளிட்டவற்றையும் இழந்துள்ளார். ஆனாலும் அவர் தன் தேடலை நிறுத்தவில்லை. தனது மகனை தேடி 24 ஆண்டுகளாக, 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ., பயணம் செய்துள்ளார். அவரின் இந்த அயராத முயற்சிக்கு, தற்போது பலன் கிடைத்துள்ளது. 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை அவர் தற்போது கண்டுபிடித்து விட்டார். இவர்கள் இணைந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
17-ஜூலை-202113:15:08 IST Report Abuse
Neutral Umpire தமிழ்நாட்டில் காணாமல் போன குழந்தையை எத்தனையோ ஆண்டுகள் கழித்து நரிக்குறவர் கூட்டத்தில் வீட்டு வாசலிலேயே பிச்சை எடுத்தபோது கண்ட பெற்றோர்களை பற்றி வார இதழில் படிக்க நேரிட்டது ..வாலிபனாக இருந்த அந்த குழந்தை நரிக்குறவர்களுடனேயே சென்று பெற்றோர்களை கண்ணீரில் கரைய விட்டது ..
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
14-ஜூலை-202121:46:56 IST Report Abuse
Nagarajan D பெத்த மனம் வெற்றி கண்டது.... வாழ்த்துக்கள் மகனுக்கும் தந்தைக்கும்
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
14-ஜூலை-202115:44:53 IST Report Abuse
Dharma //இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. // தமிழ் வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X