நான் தலைவர் அல்ல, சேவகன்: அண்ணாமலை

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (107) | |
Advertisement
கோவை: தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, 'நான் தலைவர் அல்ல, சேவகன்' என பேசியுள்ளார்.தமிழக பா.ஜ., தலைவராக, 16ம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்கிறார். அதற்காக, இன்று (ஜூலை 14) கோவையில் இருந்து, சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டார். கோவையில் அண்ணாமலைக்கு, அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவிநாசி தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் மேற்கொண்ட
Tamilnadu, BJP, Annamalai, தமிழகம், பாஜக, அண்ணாமலை, தலைவர்

கோவை: தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, 'நான் தலைவர் அல்ல, சேவகன்' என பேசியுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவராக, 16ம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்கிறார். அதற்காக, இன்று (ஜூலை 14) கோவையில் இருந்து, சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டார். கோவையில் அண்ணாமலைக்கு, அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவிநாசி தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் மேற்கொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பா.ஜ.,வில் இருந்து பல பேருக்கு அகில இந்திய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஒருபக்கம் இளமையானவர்களும், மற்றொரு பக்கம் அனுபவமுள்ளவர்களும் கட்சிக்குள் இருப்பார்கள். மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள்.


பாஜக விஸ்வரூபம் எடுக்கும்!

latest tamil newsபா.ஜ.,வை பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியம் கிடையாது. இது ஒரு கூட்டு முயற்சி. இது தனிமனித கட்சி கிடையாது. நான் தமிழக பா.ஜ., கட்சியின் தலைவர் அல்ல, சேவகன். மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு வீடாகவும் கொண்டு செல்வோம். கிராமங்களை நோக்கி எங்களின் திட்டங்களை எடுத்து செல்வோம்.

கோவை மண், நாட்டுக்காக பல உயிர்களை தியாகம் செய்துள்ளது. இந்த மண் மிகவும் புனிதமான மண், இந்த இடத்தில் இருந்து என் பயணம் தொடர்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., வரும். 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் அதிகபட்ச தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
14-ஜூலை-202121:11:38 IST Report Abuse
Venkatakrishnan தேர்தலில் மண்ணைக் கவ்வும் சங்கிகளுக்கு மத்திய-அமைச்சர் பதவியும், கவர்னர் பதவியும், மாநிலத்-தலைவர் பதவியும் வழங்கும் ஒரே காமெடி கட்சி பாஜகவாகத்தான் இருக்க முடியும்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூலை-202100:00:13 IST Report Abuse
Visu Iyerஅப்படின்னா இந்த கட்சியை தடை செய்து விடுவார்களா என்ன...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
14-ஜூலை-202121:05:31 IST Report Abuse
Venkatakrishnan கோவையைத் தவிர உமக்கும் உம் கட்சிக்கும் வேறு எங்கும் மரியாதை இல்லை அதுதான் உண்மை... சும்மா தியாக மண், புனித மண்ணுன்னு ரீல் சுத்திகிட்டு வா வா.. நெறய மீம்ஸ் வரப்போகுது, எங்களுக்கு நெறய டயம்-பாஸ் கிடைக்கப் போகுது. உன்னால் பாஜக-வின் நாலு MLA சீட்டுகள் பூஜ்யம் ஆகப்போகிறது
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூலை-202100:00:35 IST Report Abuse
Visu Iyerகோவையில் நடந்தது வேற.. அதை அப்புறம் சொல்கிறேன்....
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
14-ஜூலை-202120:58:43 IST Report Abuse
Venkatakrishnan அதற்கும் ஒரு திறமை வேணும்தான்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூலை-202100:00:46 IST Report Abuse
Visu Iyerஅதான் இவர்கிட்ட இல்லையே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X