18-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு| Dinamalar

18-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி; பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி துவங்க உள்ளதை தொடர்ந்து, வரும் 18-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு, லோக்சபா சபாநாயகர் அழைப்பு விடுத்து உள்ளனர்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடர் ஆக.,13 வரை, 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள்
பார்லிமென்ட்,parliment, allparty,meet,

புதுடில்லி; பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி துவங்க உள்ளதை தொடர்ந்து, வரும் 18-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு, லோக்சபா சபாநாயகர் அழைப்பு விடுத்து உள்ளனர்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடர் ஆக.,13 வரை, 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்நிலையில், வரும் 18-ம் தேதி காலை 11:00 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரலஹாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், அன்றைய தினமும் சபாநாயகர் ஓம்பிர்லாவும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். பார்லிமென்டை சுமூகமாக நடத்துவது குறித்து இந்த தொடரில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


இதனையே, பார்லிமென்ட் கூட்டத்தொடரை முன்னிட்டு பா.ஜ.,வின் பார்லிமென்ட் நிர்வாக குழு கூட்டம் அன்றைய தினம் நடைபெற உள்ளதாகவும், தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X