கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை: நீதிபதிகள் வேதனை

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் சாலைப் பணிகள், நடைபாதைப் பணிகள், அரசு அலுவலகங்கள் கட்டுமானப் பணிகளின் தரத்தைப் பரிசோதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர் வழக்குத்
Poverty, ChennaiHC, India, வறுமை, ஒழிக்கப்படவில்லை, சென்னை, உயர்நீதிமன்றம், கருத்து

சென்னை: சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் சாலைப் பணிகள், நடைபாதைப் பணிகள், அரசு அலுவலகங்கள் கட்டுமானப் பணிகளின் தரத்தைப் பரிசோதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அமைக்கும் சாலைகள், 6 மாதங்கள் நீடிப்பதில்லை எனவும், இதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை எனவும் தெரிவித்தார்.


latest tamil news


இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சாலைகள், கட்டடங்கள் கட்டுவது தொடர்பாக விதிகள் உள்ளதாகவும், அவற்றை அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும், சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், 'சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை, அடிப்படைக் கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை,' என வேதனை தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூலை-202108:07:17 IST Report Abuse
ருத்ரா வருமானத்திற்கு அதிகமான சொத்து, லஞ்ச ஊழல்கள் அறவே நீங்கினால், காலை கட்டிய பாலம் மாலை உடையாதிருந்தால் (ஒப்பந்தம்)ஒரு தூறலுக்கே சாலை பள்ளமாகாமல் இருந்தால் வறுமை என்றோ ஒழிந்திருக்கும் நீதிபதி அவர்களே.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
15-ஜூலை-202104:52:03 IST Report Abuse
Siva Kumar நீதிபதிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இவ்வளவு உயர்ந்த சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தால் வறுமை எப்படி ஒழியும்? எந்த கோர்டிலாவது ஒரு வழக்கையாவது குறைந்தது இரண்டு தடவை வாய்தாவில் முடித்த சரித்திரம் இந்தியாவில் உள்ளதா? ரோடு சரி இல்லை என்று கேசு போட்டால் அதற்கும் கோர்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை சொன்னது மட்டுமல்லாமல் வறுமையை பற்றி அரசியல்வாதி மாதிரி பேசி நேரத்தை வீணடிக்கும் நீதிபதிகளை இங்கு மட்டுமே காணமுடியும்.
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
15-ஜூலை-202102:41:05 IST Report Abuse
.Dr.A.Joseph அரசில் அங்கம் வகிப்பவர்களும் அதிகாரிகளும் பெரும்பகுதியை சம்பளமாகப் பெற்றால் வறுமை எப்படி ஒளியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X