பொது செய்தி

தமிழ்நாடு

"நல்லா இருக்கிற நாட்டை ஏன் பிரிக்கிறீங்க...": நடிகர் வடிவேலு

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (157)
Share
Advertisement
சென்னை: நடிகர் வடிவேலுவிடம் கொங்குநாடு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நல்லா இருக்கிற தமிழகத்தை ஏன் பிரிக்கிறீங்க, இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது,' எனக் கூறியுள்ளார்.நடிகர் வடிவேலு, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினை
Actor Vadivelu, Tamilnadu, Kongunadu, Split, நடிகர் வடிவேலு, தமிழ்நாடு, கொங்குநாடு, கருத்து

சென்னை: நடிகர் வடிவேலுவிடம் கொங்குநாடு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நல்லா இருக்கிற தமிழகத்தை ஏன் பிரிக்கிறீங்க, இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது,' எனக் கூறியுள்ளார்.

நடிகர் வடிவேலு, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார். அவரை சந்தித்து நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை கொடுத்தேன். ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்திலேயே மிக சிறப்பாக செயல்பட்டு உலகமே உற்று பார்க்கும் வகையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் முதல்வர்.

நடிகர் வடிவேலு ரீ என்ட்ரி !

முதல்வரின் ஒவ்வொரு செயல்பாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. யார் மனதையும் புண்படுத்தாமல் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் நெகிழ வைக்கிறது.


latest tamil news


தமிழக முதல்வரே தெருத்தெருவாகச் சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன். கொரோனா தடுப்பூசியை செலுத்தி மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நல்லா இருக்கிற தமிழகத்தை எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நான் அரசியல் பேசல.. ஆனா இதெல்லாம் கேட்கும் போது தலை சுத்துது. நல்லா இருக்குற தமிழகத்தை தனித் தனியாக பிரித்தால் என்ன ஆவது?. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
20-ஜூலை-202120:04:00 IST Report Abuse
Truth Triumph கொங்கு நாடு வாங்கியேதீருவோம் ...
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
20-ஜூலை-202115:17:17 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam சங்கி மங்கி இன்னுமா நீ மாறல? "ஒன்றியம்" பற்றி ஏன் மௌனம்.. கொங்கு நடிகை கோவையிடம் வாங்கியது போதாதா??? பறந்து வந்து அடிக்கப்போறாங்க்க.....
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
19-ஜூலை-202116:48:40 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அதெல்லாம் சரி நல்ல போய்கிட்டிருந்த விஜயகாந்த் நட்பை நீங்கள் ஏன் ரோட்டில் வைத்து மாநிலம் முழுதும் அசிங்கபடுதினிங்களே அது என்ன நியாயம் ...அவரின் மன உளைச்சலால் நீங்கள் பத்து வருடம் முடங்கினீர்கள் வீட்டில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X