காஷ்மீருக்குள் ஊடுருவிய டுரோன்: விரட்டியடித்த பிஎஸ்எப்| Dinamalar

காஷ்மீருக்குள் ஊடுருவிய டுரோன்: விரட்டியடித்த பிஎஸ்எப்

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (11)
Share
ஸ்ரீநகர்: காஷ்மீரில், எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அர்னியா செக்டார் பகுதிக்குள் 100- 150 மீ., உயரத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டுரோன் ஒன்று நேற்று (ஜூலை 13) இரவு ஊடுருவியது.இதனை பார்த்து உஷாரடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து அந்த டுரோன் திரும்பி சென்றது. உளவு பார்க்க அல்லது ஆயுதங்களை கடத்துவதற்கு இந்த டுரோன்
drone, kashmir, pakistan,டுரோன், ட்ரோன், பாகிஸ்தான், காஷ்மீர்,

ஸ்ரீநகர்: காஷ்மீரில், எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அர்னியா செக்டார் பகுதிக்குள் 100- 150 மீ., உயரத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டுரோன் ஒன்று நேற்று (ஜூலை 13) இரவு ஊடுருவியது.

இதனை பார்த்து உஷாரடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து அந்த டுரோன் திரும்பி சென்றது. உளவு பார்க்க அல்லது ஆயுதங்களை கடத்துவதற்கு இந்த டுரோன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 15 நாட்களில் 6வது முறையாக, பாகிஸ்தான் பகுதியில் இருந்து டுரோன் அத்துமீறி வந்துள்ளது. இதனால், பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X