கோவிட் சூழலில் கன்வர் யாத்திரை எதற்கு? உ.பி., அரசுக்கு உச்சநீதின்றம் கேள்வி

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (29) | |
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் கன்வர் யாத்திரை ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடைபெற இருக்கிறது. உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், டில்லி, இமாச்சல பிரதேசத்தில் இருந்து யாத்ரீகர்கள் ஹரித்வார் செல்வார்கள்.உத்தரகாண்ட் அரசு கோவிட் வைரஸ் தொற்றின் 3வது அலை எச்சரிக்கை காரணத்தால், கன்வர் யாத்திரையை ரத்து செய்துள்ளது. 'கடவுள் கூட மக்கள் இறப்பதை

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் கன்வர் யாத்திரை ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடைபெற இருக்கிறது. உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், டில்லி, இமாச்சல பிரதேசத்தில் இருந்து யாத்ரீகர்கள் ஹரித்வார் செல்வார்கள்.latest tamil news


சிவன் பக்தர்கள் உத்தராகண்ட்டில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு கான்வர் யாத்திரை செல்வது வழக்கம். கோவிட் பரவல் காரணமாக கடந்தாண்டு யாத்திரை ரத்தானது. இந்தாண்டும் 3வது அலையை கருத்தில் கொண்டு, உத்தராகண்டில் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலமாக வாழத்தான் கடவுள் விரும்புவார்; இறப்பதை விரும்பமாட்டார் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் வரும் 25 ம் தேதி கான்வர் யாத்திரை நடைபெறும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்தது. கோவிட் பரவும் நேரத்தில் யாத்திரையை அனுமதிப்பது ஏன்? இதனால் பக்தர்கள் குழம்பிப் போயுள்ளனர் என உ.பி அரசுக்கு நீதிபதிகள் கேள்வி விடுத்தனர். கான்வர் யாத்திரை தொடர்பான நிலைப்பாடு குறித்து பதில் -மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் உபி, உத்தராகண்ட் அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு வரும் 16ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


உத்தரகாண்ட் அரசு கோவிட் வைரஸ் தொற்றின் 3வது அலை எச்சரிக்கை காரணத்தால், கன்வர் யாத்திரையை ரத்து செய்துள்ளது. 'கடவுள் கூட மக்கள் இறப்பதை விரும்பமாட்டார். ஹரித்வார் கோவிட் தொற்றின் மையமாகிவிடக் கூடாது என்பதால் கன்வர் யாத்திரை ரத்து என்ற முடிவை எடுத்துள்ளோம்' என, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், உத்தர பிரதசே மாநில அரசு கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், 'கோவிட் நெறிமுறையை முழுமையாக பின்பற்றி ஜூலை 25ம் தேதியில் இருந்து கன்வர் யாத்திரை நடைபெறும். தேவைப்பட்டால் யாத்ரீகர்களுக்கு கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் தேவை என்பது கட்டாயமாக்கப்படலாம்' எனத் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇந்நிலையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநில அரசுக்கு, கோவிட் காலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது குறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இந்த வழக்கு மீண்டும் வரும் 17ம் தேதி விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
15-ஜூலை-202107:02:03 IST Report Abuse
Uthiran கும்பமேளாவிற்கு முன்பே கும்பமேளா, தேர்தல், திருவிழாக்கள் போன்ற மக்கள் பெருமளவு கூடக்கூடிய எந்த விஷயங்களும் நடக்காத மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தீயாக பரவியதே, அதற்கு இந்த நீதிபதிகள் என்ன காரணத்தை சொல்ல போகிறார்கள்? அந்தந்த மாநில அரசுகளின் திட்டமிட்ட சதி என்பார்களா? கும்பமேளா நடந்த பின்பும் உத்தரகண்ட் மாநிலத்தில் எந்த அளவிற்கு கொரோன பரவால் அதிகரித்தது என்பதற்கு ஆதாரமாக எதாவது தரவுகள் வைத்திருக்கிறார்களா? இதெல்லாம் எதுவும் இல்லாமல் சும்மானாச்சுக்கும் பேசி இந்த பஞ்சாயத்து பல்பு வாங்குவதே வழக்கம்.. டெல்லி ஆக்ஸிஜன் விவகாரத்திலும் இப்படி பேசி கடைசியில் கெஜ்ரிவாலின் அரசியல் சதி என்பதை புரிந்துகொண்டவுடன் பேசாமல் இருந்தார்கள்.. அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.. இங்கே ஒருத்தர் ஒன்றிணைவோம் வா என்று கூடிய போது பரவாத கொரோனவா கன்வர் யாத்திரையில் பரவிவிடப்போகிறது?
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
15-ஜூலை-202106:01:36 IST Report Abuse
Sai மதம் பொழிதல், v. n. wantoning, sporting. மதவெறி, religious frenzy 2. intoxication 3. voluptuousness 4. arrogance, அகங்காரம். மதாசாரம், மதாச்சாரம், religious practice. மதாபிமானி, a religious zealot. கன்வர் யாத்திரை Vs கன் மலை யாத்திரை
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-ஜூலை-202105:55:42 IST Report Abuse
D.Ambujavalli தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் விழா கோவிலுக்குள்ளேஏ கூட்டமின்றி நிகழ்ந்தது இப்போதுதான் கும்பமேளா மூலம் 'கொலைகள்' ஆம் கூட்டம் கூட்டும் நோய் பரப்பும் மரணங்கள் கொலைதானே, அரங்கேறியது, இன்று இந்த யாத்திரை உத்தராகண்ட் நல்லது சொன்னால் போட்டிக்காகவாவது நாட்டை நாசமாக்குவேன் என்ற வீம்புதான் முன் நிற்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X