18-44 வயதினருக்கு அதிகபட்சமாக 39 சதவீத தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | |
Advertisement
புதுடில்லி: நாட்டில் அதிகபட்சமாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு 39 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கோவிட் 2வது அலை காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மத்திய சுகாதாரத்

புதுடில்லி: நாட்டில் அதிகபட்சமாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு 39 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



நாடு முழுவதும் கோவிட் 2வது அலை காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மத்திய சுகாதாரத் துறை போதிய தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.




latest tamil news



ஜனவரி முதல் வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று 181வது நாளாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 39 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 45 - 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 34.5 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 26.5 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X