ஆதிர்ரஞ்சன் சவுத்ரி மாற்றமில்லை: காங்., வட்டாரங்கள் தகவல்| Dinamalar

ஆதிர்ரஞ்சன் சவுத்ரி மாற்றமில்லை: காங்., வட்டாரங்கள் தகவல்

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (1) | |
புதுடில்லி: லோக்சபா காங். தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றப்பட மாட்டார் என காங்., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் துவங்க உள்ளது. இந்நிலையில் லோக்சபாவுக்கான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது.இது தொடர்பாக காங்., வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய பார்லிமென்ட் தொடரில்,
ஆதிர்ரஞ்சன்சவுத்ரி, காங்., adhir ranjan chowdhury, congress,

புதுடில்லி: லோக்சபா காங். தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றப்பட மாட்டார் என காங்., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் துவங்க உள்ளது. இந்நிலையில் லோக்சபாவுக்கான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக காங்., வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய பார்லிமென்ட் தொடரில், லோக்சபா காங்., தலைவர் மாற்றப்பட மாட்டார். அந்த பதவியில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்வார்.

ராகுல், பிரியங்கா, வேணுகோபால் ஆகியோரை, பிரசாந்த் கிஷோர் சந்தித்த போது, ஆன்லைன் வழியாக சோனியாவும் அந்த கூட்டத்தில் இணைந்தார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நீடித்தது. சோனியாவை சந்திக்க கிஷோர் அனுமதி கேட்டு உள்ளார்.


latest tamil news


இந்த கூட்டத்தில்பஞ்சாப் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படவில்லை. வரும் காலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தொடர்பாகவே ஆலோசனை நடந்தது. அதேபோல், சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X