300 யூனிட் இலவச மின்சாரம்: கோவாவிலும் கெஜ்ரிவால் வாக்குறுதி

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
பனாஜி: ‛‛கோவா மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்,'' என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஏற்கனவே பஞ்சாப், உத்தர்கண்டிலும் இதே வாக்குறுதியை கெஜ்ரிவால் அளித்து உள்ளார்.ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக கோவா வந்தடைந்தார்.பனாஜியில் ஒரு செய்தியாளர்
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

பனாஜி: ‛‛கோவா மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்,'' என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஏற்கனவே பஞ்சாப், உத்தர்கண்டிலும் இதே வாக்குறுதியை கெஜ்ரிவால் அளித்து உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக கோவா வந்தடைந்தார்.

பனாஜியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது: ​​ஆம் ஆத்மி கட்சி நான்கு வாக்குறுதிகளை அளிக்கிறது.

1.ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

2. பழைய மின்சார கட்டணங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
3 கோவாவில் மின்வெட்டு இருக்காது.

4. ஆம் ஆத்மி அரசு அமைந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.


latest tamil news


கோவாவில் 87 சதவீதம் பேர் கட்டணமில்லா மின்சாரம் பெறுவார்கள். டில்லியைப் போலவே கோவாவிலும் மின் விநியோக அமைப்பில் சிக்கல்கள் உள்ளன. நாங்கள் மின்மாற்றிகள் மற்றும் கேபிள்களை மாற்றினோம். இதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது, அதனால், இன்று டில்லியில் 24 மணி நேர மின்சாரம் கிடைக்கிறது.

கோவா அரசியல் கலாசாரத்தை மாற்ற ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது, சுத்தமான அரசியலை விரும்புகிறது. கோவா அழகாக இருக்கிறது. ஆனால், அரசியலில் ஊழல் மிகுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 2019 (ஜூலை 10) அன்று 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு மாறினர். மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து ஆட்சியை வழங்கினர். ஆனால், தற்போது அரசை பா.ஜ. கைப்பற்றியுள்ளது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

​மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.) தலைவர் தீபக் தவாலிகர் மற்றும் அவரது சகோதரர் சுடின் ஆகியோர் நேற்று (ஜூலை 13) ரிசார்ட்டில் தங்கியிருந்த கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
15-ஜூலை-202107:40:01 IST Report Abuse
Baskar Population : 1,586,250 Approx households : population/4 Free units : 300 Calculation : (1,586,250/4) 300 = 118,968,750 Kw free (11 crore 89 lakhs 68 thousand 7 hundred 50 ) Kilowatts of free energy to public for one month
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-ஜூலை-202101:52:48 IST Report Abuse
Loganathan Kuttuva தனி வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் சோலார் பானில் அமைத்து கொடுக்கலாம் .அமைத்து கொடுக்க மட்டும் செலவு ஆகும் மின்சாரம் சூர்யபகவனிடமிருந்து இலவசமாக கிடைக்கும் .
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202101:25:21 IST Report Abuse
 rajan கோவா மக்கள் ஏற்கெனவே சோம்பேறிகள். உழைக்க மாட்டார்கள். விவசாயம் தெரியாது. கர்நாடகாவிலிருந்து விவசாயம் செய்ய லேபர்கள் கோவா செல்வர்.மதியம் நேரம் 1 to 3 கட்டாய ஓய்வு நேரம். தூங்கும் மக்கள்.மாலை 7 மணிக்கே ஊர் அடங்கி விடும். அவர்களை மேலும் சோம்பேறி ஆக்க வேண்டுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X