கோல்கட்டா: நந்திகிராம் தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அங்கு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டுகளை பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேற்கு வங்க சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அங்கு பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து மம்தா, மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு, ஆன்லைன் முறையில் நீதிபதி ஷம்பா சர்கார் முன்பு விசாரணைக்கு வந்தது. மம்தாவும் வழக்கில் நேரடியாக ஆஜரானார்.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.