டில்லி கலவர வழக்கு: காவல் துறைக்கு ரூ.25,000 அபராதம் விதித்த கோர்ட்

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: 2020 டில்லி கலவரத்துடன் தொடர்புடைய ஒரு வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், 'குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற காவல்துறை செயல்பட்டது தெளிவாகிறது' என கூறி டில்லி காவல் துறைக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது.தலைநகர் டில்லியில் சி.ஏ.ஏ., எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே 2020 பிப்ரவரியில் கலவரம் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்ட மக்கள் இக்கலவரத்தில்
டில்லி, கலவரம்,வழக்கு, காவல் துறை, அபராதம், கோர்ட், Court,Delhi,கோர்ட்,டில்லி,நீதிமன்றம்

புதுடில்லி: 2020 டில்லி கலவரத்துடன் தொடர்புடைய ஒரு வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், 'குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற காவல்துறை செயல்பட்டது தெளிவாகிறது' என கூறி டில்லி காவல் துறைக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது.

தலைநகர் டில்லியில் சி.ஏ.ஏ., எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே 2020 பிப்ரவரியில் கலவரம் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்ட மக்கள் இக்கலவரத்தில் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இக்கலவரத்தில் முகமது நசீர் என்பவருக்கு கண்ணில் குண்டடிப்பட்டது. அவர் தன்னை சுட்டதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த 6 பேரை குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவர் புகாரை போலீசார் தொடர்பற்ற பிற வழக்குடன் இணைத்துள்ளனர்.


latest tamil news


அவர் மாநகர மாஜிஸ்திரேட்டை அணுகி புகாரளித்தார். அவர் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல் துறையினரைக் கோரியிருந்தார். அதனை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முழு விசாரணை முடிந்து நேற்று (ஜூலை 13) டில்லி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, காவல் துறையின் செயல் அதிர்ச்சியாகவும், கொடுமையானதாகவும் உள்ளது என்றார்.

மேலும் தனது உத்தரவில், “இந்த விவகாரத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தின் கட்டாய விதிகள் பின்பற்றவில்லை. இதன் மூலம் விசாரணை மிக சாதாரண மற்றும் மோசமான முறையில் செய்யப்பட்டுள்ளது என தெளிவாக தெரிகிறது. எந்தவொரு விசாரணையும் இன்றி காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நற்சான்று கொடுத்தது எப்படி. முழு வழக்கையும் பார்த்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற காவல்துறை செயல்பட்டு வந்தது தெளிவாகிறது. இது போன்ற வழக்குகளில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றதுடன் வழக்கை விசாரித்த போலீசாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
15-ஜூலை-202107:01:00 IST Report Abuse
Indhuindian சும்மா இந்த மாதிரி வெத்து வெட்டு அறிக்கையை வுட்டுட்டு சட்டப்படியே அல்லது மத்திய அரசு (தவறி பொய்கூட ஒன்றிய அரசுகிட்டே போயிடாதீங்க ஒன்னும் நடக்காது - மத்திய அரசு ஞாபகம் வெச்சிக்கோங்கோ) மூலமாகவோ தீர்வு காணுங்கள். உங்க அறிக்கை வென பேபேர்லயே இடத்த அடைக்கறதுக்கு வேணா பயன்படும் அதனாலே ஒரு பிரயோஜனமும் இல்லே.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
14-ஜூலை-202120:13:18 IST Report Abuse
Rajas ////அவர் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல் துறையினரைக் கோரியிருந்தார்/// டிஜிட்டல் இந்தியா என்று பிஜேபி முழங்குகிறது. ஆனால் மத்திய அரசின் கீழே இருக்கும் டில்லி போலீஸ் ஒரு FIR தருவதற்கு ஏன் பதுங்குகிறது.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-202119:31:23 IST Report Abuse
Janarthanan தீர்ப்புக்கு காலக்கெடு இல்லாமல் ஜாமின் /வாய்தா கொடுத்து பல லட்சம் கேஸ் தேங்கி கிடக்கிறது ????
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜூலை-202101:13:52 IST Report Abuse
தமிழவேல் பிரக்கியா சிங் தாக்குர் கேசப்பத்தி சொல்றியா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X