தேசவிரோத சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கும் தேசவிரோதச் சட்டத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வாம்பாத்கரே தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து உள்ளதாவது:ஐபிசி சட்டத்தில் 124ஏ பிரிவு என்பது தேசத்துரோகச் சட்டத்தைக் குறிக்கிறது. ஆனால், இந்தச் சட்டம்

புதுடில்லி: அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கும் தேசவிரோதச் சட்டத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வாம்பாத்கரே தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து உள்ளதாவது:ஐபிசி சட்டத்தில் 124ஏ பிரிவு என்பது தேசத்துரோகச் சட்டத்தைக் குறிக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; சமத்துவமற்றது; சந்தேகத்துக்கு இடமின்றி, தெளிவாக இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்று.latest tamil newsஇது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (சி) வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றுக்குத் தேவையற்ற வகையில் கட்டுப்பாடு விதிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை அனுமதிக்காமல் சட்டம் மறுக்கிறது.அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான வகையில் இந்தச் சட்டத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசாங்கத்தின் மீதான அதிருப்தி என்ற வகையில் சட்டத்துக்குத் தெளிவற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil newsஇந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு, வழக்கின் விசாரணையை 15ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து உள்ளனர். மேலும், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.சுரேஷ், பிரசன்னா இருவரும், இந்த வழக்கு தொடர்பான நகலை அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு வழங்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devan - Chennai,இந்தியா
15-ஜூலை-202110:36:03 IST Report Abuse
Devan Any freedom won"t come without limitation. Your freedom of swinging your walking stick is up to my nose only, not beyond that. And freedom without any control is not advisable. It will lead to stone age only. If India has to improve strong control is necessary
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
15-ஜூலை-202109:29:26 IST Report Abuse
Dharmavaan கோர்ட் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.கருது பேச்சுரிமை என்ற பழைய பெயரில் தேசவிரோத சக்திகளை அனுமதிக்க கூடாது.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-ஜூலை-202108:54:09 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan நீதிமன்றம் இன்றைய சூழ்நிலையை கவனத்தில் எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்பதை நீதிமன்றம் வரை படுத்தவேண்டும். நீதிமன்றத்தை பற்றி கருத்து சொன்னால் மட்டும் அவர்களுக்கு பொறுக்க முடியவில்லை . அது சரியா . இந்த வழக்கை நீதிமன்றம் அனுமதித்தது தவறு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X