காங்.,கில் பிரசாந்த் கிஷோர்?: லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம்!

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி,: தொடர் தேர்தல் தோல்விகள், பலர் வெளியேறி வருவது, அதிருப்தியாளர்கள் அதிகரித்துள்ளது என, நாட்டின் மிகவும் பழமையான கட்சியான காங்கிரசில் பல பிரச்னைகள் உள்ளன. அதனால், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்துக் கொள்ள முயற்சி நடக்கிறது. காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், அவருடைய சகோதரி
காங்., பிரசாந்த் கிஷோர்?, லோக்சபா தேர்தல், புதிய வியூகம்

புதுடில்லி,: தொடர் தேர்தல் தோல்விகள், பலர் வெளியேறி வருவது, அதிருப்தியாளர்கள் அதிகரித்துள்ளது என, நாட்டின் மிகவும் பழமையான கட்சியான காங்கிரசில் பல பிரச்னைகள் உள்ளன. அதனால், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்துக் கொள்ள முயற்சி நடக்கிறது. காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், அவருடைய சகோதரி பிரியங்காவை அவர் சந்தித்தபோது,
இது குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., வரலாற்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன்பின், 2019ல் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் பல மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வென்றது; காங்., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.


கோஷ்டி மோதல்இதற்கிடையே, கட்சியில் இருந்து பல இளம் தலைவர்கள் வெளியேறினர். மூத்த தலைவர்கள் பலர், அதிருப்தியாளர்களாக மாறினர். பெரும்பாலான மாநிலங்களில், கட்சியில் கோஷ்டி மோதல் மிக மிக வெளிப்படையாக உள்ளது.அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில், காங்.,குடன் கூட்டணி வைக்க, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மறுத்துள்ளன.காங்., அல்லாத தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளனர்.கடந்த 2014 லேக்சபா தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தவர், பிரசாந்த் கிஷோர், 44. அந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின், அவர் பிரபலமானார். பல கட்சிகள் அவருடைய சேவையை பெறுவதற்கு
காத்திருந்தன.

ஆனால், காங்., உடனான கிஷோரின் உறவு சிறப்பாக அமையவில்லை.இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மேலும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு, கட்சிகள் தற்போதே தயாராகி வருகின்றன.இதற்கிடையே, கடந்த மார்ச், ஏப்., மாதங்களில், ஐந்து மாநிலங்களுக்கு சட்ட சபை தேர்தல் நடந்தது. அதில், பிரசாந்த் கிஷோர் சேவையைப் பெற்ற தி.மு.க., தமிழகத்திலும், திரிணமுல் காங்., மேற்கு வங்கத்திலும் அமோக வெற்றி பெற்றன.அந்தத் தேர்தல் முடிவு கள் வெளியான நிலையில், 'நான் இந்த பணியில் இருந்து விலகியிருக்க போகிறேன். நான் தற்போது செய்வதை தொடரப் போவதில்லை. இதில் இருந்து விலகி, வேறு ஏதாவது செய்ய திட்டமிட்டுஉள்ளேன்' என்று கூறினார்.


சந்திப்புஆனால், கடந்த சில வாரங்களாக, அவர் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்து பேசினார். அதில், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டில்லி யில் காங்., தலைவர் சோனியா, அவருடைய மகனும், முன்னாள் தலைவருமான ராகுல், மகளும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்காவை, நேற்று முன்தினம் சந்தித்து பேசினார் பிரசாந்த் கிஷோர்.பஞ்சாப் சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்த சந்திப்பின்போது வேறு முக்கிய விஷயம் பேசப்பட்டதாக தெரிகிறது. காங்.,கில் அவர் இணைவது தொடர்பாக பேசப்பட்டதாகவும், கட்சியில் எந்த பொறுப்பு கொடுப்பது குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பீஹாரில் ஆளும் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியில், பிரசாந்த் கிஷோர் சில காலம் துணைத் தலைவராக இருந்தார். ஆனால், பல விஷயங்களில் வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கினார். அதனால், கட்சியில் இருந்து விலக நேர்ந்தது.

காங்., கட்சி குறித்தும் அவர் பலமுறை விமர்சித்துள்ளார். '100 ஆண்டு கால கட்சியில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர்; அவர்களுடன் ஒத்து போகவில்லை' என, ஏற்கனவே கூறியிருந்தார்.தேர்தல் வியூக பணிகளை நிறுத்தப்போவதாக அவர் கூறியபோது, அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு, 'நான் தோல்வியடைந்த அரசியல்வாதி' என, பிரஷாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.இந்நிலையில், காங்., கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இளம் வயதினரான பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்க, காங்., தீவிரமாக உள்ளது. இதன் மூலம், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூலை-202120:10:06 IST Report Abuse
Visu Iyer அவ்வளவு தான் இனி பாஜகவுக்கு பச்சை மிளகாய் தான்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-202117:08:35 IST Report Abuse
J.V. Iyer நிரந்தர தலைவர் பதவி கிடைத்தால் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் தாவலாம்.ஆனால் பெயரை பிரஷாந்த் கிஷோர் காந்தி என்று மாற்றிக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
15-ஜூலை-202115:47:38 IST Report Abuse
elakkumanan உயிர் இருக்கும் உடலை விரைவு வாகனத்தில் கொண்டு சென்று வைத்தியம் பார்க்க முயற்சிக்கலாம்...பிழைக்கலாம்.... அதெல்லாம் எல்லாரும் தெரிந்ததுதான்... செய்வதுதான்........ ஆனால், இறந்த உடம்பை எந்த வண்டியில் எவ்வளவு வேகமாக எடுத்துச்சென்று என்ன பயன் என்று பெரிய பெரிய மேதைகள் யாராவது சொன்னா, எண்ணெய மாதிரி தற்குறிக்கு கொஞ்சம் புரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X