இது உங்கள் இடம்: இது தான் மக்களாட்சியின் தத்துவம்!

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (71) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:மணிமேகலை, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இளைத்தவனை வலுத்தவன் வெல்வது யுத்த தர்மம் ஆகாது' என்பது பழமொழி. ஆனால் மக்களாட்சியில் அது தான் தர்மம் என மாற்றப்பட்டுள்ளது என்பதை, அரசின் செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் பறைசாற்றி கொண்டிருக்கிறது.கச்சா எண்ணெய் விலை எவ்வளவு
Fuel, Petrol, Diesel


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


மணிமேகலை, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இளைத்தவனை வலுத்தவன் வெல்வது யுத்த தர்மம் ஆகாது' என்பது பழமொழி. ஆனால் மக்களாட்சியில் அது தான் தர்மம் என மாற்றப்பட்டுள்ளது என்பதை, அரசின் செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் பறைசாற்றி கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தப்பட்டு வருகிறது. மத்திய - மாநில அரசு நிர்வாகத்திற்கு வரி பிடித்தம் அவசியம் என அனைத்து சுமையையும் நடுத்தர, சாமானிய மக்களின் தலை மேல் வைத்து நசுக்குவது தான் மக்களாட்சியின், 'தத்துவம்!'


latest tamil news


பெட்ரோல், டீசல் விலை சதமடித்த நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி விலை பற்றிய உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 74- டாலர்; அதாவது, 5,450 ரூபாய். ஒரு பேரல் என்பது 159- லி., கொள்ளளவு. அப்படியென்றால் 1 லி., கச்சா எண்ணெய் 34.28 ரூபாய். சுத்திகரிப்பு செலவு 3.82 ரூபாய்; டீலர் கமிஷன் 3.87 ரூபாய் என்றால், 1 லி., பெட்ரோல் 41.97 ரூபாய்.

அதிகபட்ச ஜி.எஸ்.டி.,யான 28 சதவீதம் வரி விதித்தாலும், 11.75 ரூபாய் தான். அப்படியென்றால், 1 லி., பெட்ரோலை 53.72 ரூபாய்க்கு மக்களுக்கு வினியோகிக்க முடியும். பின் அது எப்படி சச்சின் டெண்டுல்கர் போல சதமடித்தது என்றால்... பெட்ரோல், டீசல் வரி விதிப்பு வாயிலாக மத்திய அரசுக்கு 2020 - ஏப்ரல் முதல், 2021 - ஜனவரி வரை மட்டும் 2 லட்சத்து 4,906 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இப்போது புரிகிறதா? மக்களாட்சி தத்துவம் என்னவென்றால் மக்கள் துயரத்தில் உழன்று மத்திய - மாநில அரசுகளை வாழ வைப்பதாகும்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜூலை-202105:47:11 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி எரிபொருளின் மீது ஏகப்பட்ட வரிகளை போட்டு அரசாங்கத்தில் மக்களிடம் இருந்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள் ,எது எப்படியோ மிகப் பெரும் புரட்சி மக்களிடம் விரைவில் வெடிக்கத்தான் போகிறது ,அப்போதுதான் அரசாங்கம் திருந்தும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
15-ஜூலை-202120:31:03 IST Report Abuse
P.K.SELVARAJ இதை போன்று காங்கிரஸ் செய்திருந்தால் ஆள தெரியாதவர்கள். பிஜேபி செய்தால் சரியாக ஆள தெரிந்தவர்கள்.
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
15-ஜூலை-202119:29:05 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் CORPORATE KAARAN வருமனதிற்கு வரி வெறும் 3 % ஆனால் நாம் PETRol அடகவிலை 33 அனால் 66 % வரி கட்டுகிறோம் ஒரு லிட்டர் க்கு அதே போல GAS அடகவிலை 350 அனால் 166 % வரி கட்டுகிறோம் ஒரு சிலிண்டர் க்கு , இவ்வவ்ளு வரி நாம் கட்டுவது CORPORATE காரன் நஷ்டம் அடைய கூடாது அல்லவ, இதை ஊடகங்கள் வெளியே சொல்லுவது இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X