3 பயங்கரவாதிகள் சிக்கினர்: உ.பி.,யில் போலீஸ் உஷார்!

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
லக்னோ : உ.பி., மாநிலத்தில் மேலும், மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த, 11ம் தேதி, மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் நடத்திய சோதனையில், அல் - குவைதா இயக்க பயங்கரவாதிகள், மினாஷ் அகமது, முசரூதீன் ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், மாநிலத்தின் சில பகுதிகளில் மனித வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாத செயல் நடத்த
UP_ATS, Al Qaeda, terrorists,Uttar Pradesh,உத்தரபிரதேசம்

லக்னோ : உ.பி., மாநிலத்தில் மேலும், மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த, 11ம் தேதி, மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் நடத்திய சோதனையில், அல் - குவைதா இயக்க பயங்கரவாதிகள், மினாஷ் அகமது, முசரூதீன் ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், மாநிலத்தின் சில பகுதிகளில் மனித வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாத செயல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.


latest tamil news


இதையடுத்து, உ.பி., மாநில போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். லக்னோ வாசிர்கஞ்ச் பகுதியை சேர்ந்த, ஷகீல், கேம்ப்வெல் சாலையை சேர்ந்த, முகமது மொய்தீன், முசாபர் நகரை சேர்ந்த, முகமது முஸ்திகீம் ஆகிய, மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர்.

இம்மூவரும் அல் - குவைதா இயக்கத்தின், 'அன்சார் கஸ்வதுல் ஹிந்த்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், சுதந்திர தினத்துக்கு முன், தலைநகர் லக்னோ உட்பட மாநிலத்தில் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்த திட்டமிட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
15-ஜூலை-202116:29:36 IST Report Abuse
Sowmya Sundararajan இங்கே அரசை கேலி செய்து நடந்த கைதை டுபாக்கூர் என்று பேசும் பெரும் குடிமக்களை இந்த கைதிகளுடன்அவர்கள் இருக்கும் செல்லில் ஒரு வாரம் அடைந்துவிட்டால் அவர்களே நேரில் பார்த்து கைதிகள் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவார்கள் . இல்லை என்றால் அவர்கள் வீட்டில் வைத்து ஒரு வாரம் போஷித்து அவர்கள் தீவிரவாதிகளா இல்லை ர்ர்ர்ரெம்ப நல்லவர்களா என்று கண்டுபிடிக்கட்டும் . அவ்வப்போது அரசு அதிகாரி வந்து இவர்கள் கைதிகளை சரியாக எந்த லட்சணத்துடன் நடத்துகிறார்கள என்று பார்த்துக்கொள்ளட்டும்.
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202115:56:39 IST Report Abuse
Laks Giri என்னதான் பிரச்னை உங்களுக்கு?இவனுகளை என்கௌண்டர் செய்யவேண்டும்
Rate this:
Cancel
Mano - Madurai,இந்தியா
15-ஜூலை-202111:45:37 IST Report Abuse
Mano தேர்தல் நெருங்க நெருங்க, சங்கிகள் ஏற்பாடு செய்த ஆட்கள் எல்லாம் மாட்டுவானுங்க. இதுக்கு பேருதான் அரசியல் ட்ரிக்ஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X