பொது செய்தி

இந்தியா

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்; 18ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021
Share
Advertisement
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதை சுமுகமாக நடத்துவதற்காக, 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், 19ம் தேதி துவங்கி, ஆக., 13 வரை நடைபெற உள்ளது. இதற்காக, பார்லி., வளாகம் முழுதும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். சபாநாயகர் ஓம் பிர்லாவும் அவற்றை ஆய்வு செய்து
Monsoon Session, all party meeting, Parliament

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதை சுமுகமாக நடத்துவதற்காக, 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், 19ம் தேதி துவங்கி, ஆக., 13 வரை நடைபெற உள்ளது. இதற்காக, பார்லி., வளாகம் முழுதும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். சபாநாயகர் ஓம் பிர்லாவும் அவற்றை ஆய்வு செய்து வருகிறார்.தீவிரம்இதற்கிடையே, இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய பிரச்னைகளை கிளப்ப, எதிர்க்கட்சிஎம்.பி.,க்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

தடுப்பூசி விவகாரம் மட்டுமின்றி, விவசாயிகள் பிரச்னை, ரபேல் விவகாரம், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை, முக்கிய துறைகளில் நிலவும் சுணக்கம் என, மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த பல விஷயங்கள் காத்திருக்கின்றன. இவற்றை முறியடிக்க, ஆளும் கட்சி தரப்பும் பல வியூகங்களை வகுத்துள்ளது.

இதற்காகவே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில், பா.ஜ., மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. தகவல்அதில், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மூத்த எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.


latest tamil news



இதற்கிடையே, மழைக்கால கூட்டத் தொடரையொட்டி அனைத்து கட்சிகள் கூட்டத்தை, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி 18ம் தேதி கூட்டியுள்ளார்.காலை, 11:00 மணிக்கு துவங்கும் இதில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

அதேநாள் மாலையில், சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில், லோக்சபா கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதே நாளில், ராஜ்ய சபா கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டமும் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


பியுஷ் கோயலுக்கு புதிய பதவி


ராஜ்யசபாவில் சபை முன்னவராகவும், அமைச்சராகவும் இருந்த தாவர்சந்த் கெலாட், சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, கர்நாடக கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, தற்காலிக பொறுப்பாக சபை முன்னவர் பதவி தரப்பட்டது.

இந்நிலையில், பார்லி.,யின் மழைக்கால கூட்டத் தொடர் 19ம் தேதி துவங்க உள்ளது. இதையடுத்து, சபை முன்னவர் பதவி, பியுஷ் கோயலுக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2010 முதல் ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் பியுஷ் கோயல், தற்போது ஜவுளி, வர்த்தகம், தொழில் மற்றும் நுகர்வோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X