பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 15: பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 15), பெட்ரோல் லிட்டருக்கு 102.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 15), பெட்ரோல் லிட்டருக்கு 102.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 101.92 ரூபாய், டீசல் லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து, லிட்டர் 102.23 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஜூலை-202118:03:14 IST Report Abuse
g.s,rajan ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது ,நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டும் என்று நிதி ஆயுக் தலைவர் ( திரு ராஜேஷ் குமார் கூறி உள்ளார் கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று குருட்டு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் ,ஆனால் வெறும் யேஷ்யங்கள் தேவை இல்லை .காகிதத்தில் காட்டப்படும் வளர்ச்சியை விட நாம் நமது கண்களால் நேரடியாகக் காணப்படும் வளர்ச்சியே உண்மையானது ,நம்பகத்தன்மை வாய்ந்தது .ஒரு நாடுபொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டால் அங்கு பிச்சைக்காரர்களும் ,ஏழைகளும் அறவே இருக்கக் கூடாது ,நாட்டின் வளமையை வளர்ச்சியை செழுமையை மக்களாகிய அனைவரும் நாம் நேரடியாக காணவேண்டும் ,அதுதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி .மேலும் பணத்திற்கு மதிப்பு இருக்க வேண்டும் ,விலைவாசி மற்றும் வாங்கும் சக்தி எல்லா தரப்பு மக்களிடமும் கட்டாயம் இருக்க வேண்டும் .தற்போது இந்தியாவில் பணக்காரர்களிடம் மட்டுமே வாங்கும் சக்தி காணப்படுகிறது ,எந்தப் பொருள் என்ன விலைக்கு விற்றாலும் அந்தப் பொருளை பணம் படைத்தவர்கள் வாங்கி விடுவார்கள் ,ஆனால் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்கும் சக்தி இல்லாமல் திணறுகின்றனர் .எரிபொருள் விலை வேறு ராட்சசனைப் போல பயமுறுத்திக்கிட்டே இருக்கு ,மக்கள் எரிபொருள் விலை உயர்வால் நித்தம் ,எரிபொருள் விலை உயர்வால் விலை வாசி இந்தியாவில் தாறுமாறாக எகிறி உள்ளது இதனால் பீதி அடைந்து போய் உள்ளனர் வருமானமோ சொற்பம் செலவுகளோ உச்சம் ,கையில் எது மிச்சம் ????, ஜி.எஸ்.ராஜன், சென்னை .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஜூலை-202117:41:41 IST Report Abuse
g.s,rajan இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் .,பி எஸ் வீரப்பாவின் வசனம் எத்தனை காலத்திற்கும் பொருந்தும் . ஜி.எஸ்.ராஜன், சென்னை..
Rate this:
Cancel
15-ஜூலை-202116:34:31 IST Report Abuse
அப்புசாமி வீட்டுக்கு வீடு குழாய் போட்டு தண்ணீர் குடுத்தாசசு. அடுத்து வீட்டுக்கு வீடு பைப்ல பெட்ரோல் வர ஏற்பாடு செய்யுங்க ஐயா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X