பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்' காட்டிய மக்கள்! பத்திரப்பதிவில் லஞ்சமயம்; அமைச்சரிடம் 'தில்' முறையீடு!

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (76)
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில், ஆய்வு நடத்திய அமைச்சரிடம், மக்கள், துணிச்சலுடன் 'லஞ்சம் தலைவிரித்தாடுவது' குறித்து முறையீடு செய்தனர். அதிகாரிகளை மாற்ற அமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டார்.அவிநாசி சார்-- பதிவாளர் அலுவலகத்தில், வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, நேற்று மதியம் திடீர் ஆய்வு நடத்தினார்; அலுவலகத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்ததை
பத்திரப்பதிவு, லஞ்சம், அமைச்சர்

அவிநாசி : அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில், ஆய்வு நடத்திய அமைச்சரிடம், மக்கள், துணிச்சலுடன் 'லஞ்சம் தலைவிரித்தாடுவது' குறித்து முறையீடு செய்தனர். அதிகாரிகளை மாற்ற அமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டார்.

அவிநாசி சார்-- பதிவாளர் அலுவலகத்தில், வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, நேற்று மதியம் திடீர் ஆய்வு நடத்தினார்; அலுவலகத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்ததை பார்த்து, அதிர்ந்த அமைச்சர், காத்திருப்புக்கான காரணம் குறித்து கேட்டார்.

'பத்திரப் பதிவுக்காக தான் காத்திருக்கிறோம்' என, அங்கிருந்தவர்கள் கூறினர்.பொதுமக்கள் சிலர் அமைச்சரிடம் கூறிய தாவது:பத்திர எழுத்தர்கள் தான் பத்திரப்பதிவுக்கான 'டோக்கன்' வழங்குகின்றனர்; இடைத்தரகர் தலையீடும், அதிகளவில் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும், மிக அதிகளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

பத்திரப்பதிவுக்கு, காலதாமதம் செய்யப்படுகிறது.பத்திரப்பதிவு முடிந்து மாலை நேரத்தில், லஞ்சப்பணம் பங்கிடப்படுகிறது. அனுமதியற்ற வீட்டுமனைகளுக்கும் அங்கீகாரம் வழங்குகின்றனர்.இவ்வாறான குற்றச்சாட்டுகளை, பகிரங்கமாக கூறினர்.அமைச்சர் கூறுகையில், ''இடைத்தரகர் தலையீடு ஒழிக்கப்படும்; பத்திரப்பதிவுக்கான காலதாமதம், ஊழலுக்கு வழி வகுக்கும்'' என்றார்.


latest tamil news
-கண்ணை கட்டுதே!


பத்திரப்பதிவு சார்ந்த பல்வேறு குறைகளை, பொதுமக்கள், அமைச்சரி டம் கூறினர். இதை கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், "எனக்கு கண்ணை கட்டுதே" எனக்கூற, கூடியிருந்த மக்கள் சிரித்தனர்.அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தஅமைச்சர், உடன் வந்த பத்திரப்பதிவு துறை செயலர் ஜோதி நிர்மலா சாமியிடம், ''இங்குள்ள (அவிநாசியில்) சார்- பதிவாளர்களை உடனே மாற்றி விடுங்கள்,'' என்றார்.


கூனிக்குறுகிய அதிகாரிகள்


மக்களின் நேரடி புகார்களால், சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் 'கூனிக்குறுகி'னர்; 'லஞ்சம் தவிர்த்தால், நெஞ்சம் நிமிரலாம்' என்ற உண்மையை உணரத் தவறுவோருக்கு, மக்களின் துணிச்சலனா முறையீடு, அதிர்ச்சியை தந்தது. லஞ்சத்திற்கெதிராக, அதிரடிகள் தொடர வேண்டும் என்பது மக்கள் விருப்பம்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஜூலை-202104:14:26 IST Report Abuse
meenakshisundaram தேர்தலுக்கு முன்னாள் ஆங்கில சேனல் க்கு பேட்டி அளித்த ஸ்டாலின் ஏதோ திமுகவின் கொள்கையான 'கடைமை .கண்ணியம் கட்டுப்பாடு 'என்பதே போல ' கமிஷன் ,கரப்ஸ்சின் 'என்று மூன்று முறை புலம்பிநார் .அதிகாரிகளுக்கு அவர் கொடுத்த அட்வைஸ் ?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
15-ஜூலை-202119:50:10 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஒரு திருமணத்தை பதிவு செய்வதற்கு வளசரவாக்கம் பத்திர பதிவு அலுவலகத்தில் மணமகன், மணமகள், பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர் ஐ கிட்டத்தட்ட 5 மணி நேரங்களுக்கும் மேலாக காக்க வைத்து அந்த படிவத்தை தேவை இல்லாமல் xerox எடுக்க வைத்து (ஒரு பக்கத்திற்கு ஏழு ரூபாய்) லஞ்சம் கிடைக்காததால் காலா தாமதம் செய்தனர். அங்குள்ள அலுவலர்களிடம் சண்டை (வாக்குவாதம்) போட்டு அதை பின்னர் மொபைல் போனில் வீடியோ எடுத்து social media வில் போட்டுவிடுவோம் என சொன்ன பிறகு ஒரு வழியாக அந்த வேலை முடிந்தது. இது july 2018 ல் நடந்தது. இதில் ஏஜெண்டுகள் அலுவலர்களுக்கு சப்போர்ட் செய்தார்கள். (நாங்கள் ஏஜென்ட் மூலமாக செல்லாமல் நேரடியாக பதிய சென்றோம்). இதேபோல் தான் RTO அலுவலகத்திலும். ஏஜென்ட் மூலமாக செல்லாமல் நேரடியாக driving license அப்ளை செய்து வாங்க முடிந்தால் நீங்கள் ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ, தேசத்தின் பிரதான மந்திரியாகவோ, ராஷ்டிரபதியாகவோ, குறைந்த பட்சம் எதேனும் ஒரு அரசியல் கட்சியில் செல்வாக்கு உள்ளவராக இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
16-ஜூலை-202105:59:03 IST Report Abuse
கௌடில்யன்மந்தவெளியில் நடந்த மகள் திருமணத்தன்று சார்பதிவாளர் அலுவலகம் வந்து பதிவு செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்தினர் .மூணு மணி நேரம் அலைக்கழித்துவிட்டு என்னமோ முணுமுணுத்துக்கொண்டே பதிவு முடித்தவுடன் உங்கள் சமுதாயத்தில் நிறைய சடங்குகள் இருக்குமே என்று நக்கல் அடித்தார்கள் ..திருமண மண்டபத்திலேயே மேனேஜருக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கினால் எவ்வளவு சவுகரியமா இருக்கும்...
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
15-ஜூலை-202117:27:21 IST Report Abuse
Rengaraj லஞ்சம் இல்லாமல் இங்கு எதுவுமே நடக்காது. லஞ்சம், கையூட்டு, இனாம் , அன்பளிப்பு , பொருள் உதவி , ஆட்கள் சப்ளை , சுற்றுலா , விருந்து , கவனிப்பு, இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் அது இருந்துகொண்டுதான் இருக்கும். அதை விரட்ட முடியாது. லஞ்சத்தை ஒழிக்க முடியவே முடியாது. தொன்று தொட்டே இது பல பல வடிவங்களில் இருந்துகொண்டே தான் இருக்கிறது. மக்களும் அதற்கு பழகி விட்டார்கள். பணம் இல்லாமல் தவிக்கும் ஏழைமக்களையும் இது தாக்கும்போது நமக்கும் நெஞ்சம் வலிக்கிறது. மற்றபடி சமத்துவ சமுதாயம், மக்கள் நலன், சமூக நீதி, ஏழை பங்காளன் , தொழிலாளர் களின் தோழன் என்று சொல்லிக்கொள்ளும் பகட்டு அரசியல்வாதிகள் விடும் சவடால், புருடா இவை மூலமெல்லாம் லஞ்சம் வாங்குவதும் தருவதும் மாறிவிடுமா என்ன ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X