தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த, பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பும் ஒருவராக கருதப்பட்டார்.அவர், தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., வேட்பாளருக்கு கடும் போட்டியை கொடுத்தார்.

குஷ்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக, உளவு துறையும், டில்லிக்கு தகவல் அனுப்பியது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஷ்புவை ஆதரித்து, சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்தி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இருப்பினும், தி.மு.க., வேட்பாளரிடம் குஷ்பு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், குஷ்பு, சில தினங்களாக, டில்லியில் முகாமிட்டுள்ளார். அவர் பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷன் ரெட்டி, முருகன் உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலிட தலைவர்களிடம், கட்சியில் தனக்கு முக்கிய பதவி அளிக்குமாறு குஷ்பு வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE