பொது செய்தி

இந்தியா

பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் ரூ.30 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: பாபா ராம்தேவின், பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல், கடந்த நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்த உயர்வுக்கு, ருச்சி சோயா நிறுவனத்தை கையகப்படுத்தியதும் முக்கியமான காரணமாகும். கடந்த ஆண்டு விற்றுமுதலில் பாதிப் பங்கு, ருச்சி சோயாவை சேர்ந்ததாகும். கடந்த நிதியாண்டில் ருச்சி சோயாவின் விற்றுமுதல், 16 ஆயிரத்து 318 கோடி ரூபாய். இதற்கு முந்தைய 2019 -20
Patanjali Group, Revenue, 30KCrore, FY21, Baba Ramdev, பதஞ்சலி, விற்றுமுதல், பாபாராம்தேவ்

புதுடில்லி: பாபா ராம்தேவின், பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல், கடந்த நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த உயர்வுக்கு, ருச்சி சோயா நிறுவனத்தை கையகப்படுத்தியதும் முக்கியமான காரணமாகும். கடந்த ஆண்டு விற்றுமுதலில் பாதிப் பங்கு, ருச்சி சோயாவை சேர்ந்ததாகும். கடந்த நிதியாண்டில் ருச்சி சோயாவின் விற்றுமுதல், 16 ஆயிரத்து 318 கோடி ரூபாய். இதற்கு முந்தைய 2019 -20 நிதியாண்டில், பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல், 25 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 12 ஆயிரம் கோடி ரூபாய், பதஞ்சலி குழுமத்தின் பங்காகும்.


latest tamil news



ருச்சி சோயாவின் பங்களிப்பு, 13 ஆயிரத்து, 117 கோடி ரூபாய். தற்போது, நிறுவனத்தின் கடன், 3,330 கோடி ரூபாயாக இருப்பதாகவும்; அடுத்த 3 - 4 ஆண்டுகளில், நிறுவனம் கடனே இல்லாத ஒன்றாக மாறும் என்றும், பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார். மேலும், ருச்சி சோயா நிறுவனம் விரைவில் தொடர் பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாகவும்; அதன் வாயிலாக, 4,300 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாபா ராம்தேவ் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-202117:09:49 IST Report Abuse
vns மிகவும் ஏழ்மயில் இருந்து இன்றைக்கு முதன்மை பணக்காரர்களில் ஒருவர். சைக்கிளில் வீதிவீதியாக மருந்து விற்றவர்கள் திரு பாபாவும் திரு பாலக்ரிஷ்ணனும். பாபா ராம்தேவ் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை மற்றும் நம்பி முன்னேறியவர். இன்னமும் இவரது நிறுவனங்கள் வளர்ந்து கிராமங்களின், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தட்டும்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-202114:05:10 IST Report Abuse
vpurushothaman பாபாஜின்னா சும்மாவா ?
Rate this:
Cancel
Thiru - Chennai,இந்தியா
15-ஜூலை-202112:34:07 IST Report Abuse
Thiru பதஞ்சலி நிறுவனத்தின் பல பொருள்களின் விலை மிகவும் குறைவு, எப்படியென்றால் பொருள்களின் மீதான லாபம் மிக குறைவு, சில்லறை வணிகத்தின் லாபமும் குறைவு, அதனால் பெரும்பாலான மளிகை கடைகளில் இவர்களின் பொருள்கள் கிடைப்பதில்லை. பதஞ்சலி பற்பசையினால் வெளிநாட்டு பற்பசை நிறுவனம் ஆட்டம் கண்டுவிட்டது, அதனால் அவர்கள் வேதசக்தி என்றெல்லாம் மாற்றியும் பெரிய புண்ணியம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X