பாலாறு - பெண்ணையாறு இணைப்பு இந்த ஆட்சியிலாவது நடக்குமா?

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (20)
Advertisement
சென்னை: பாலாறு - பெண்ணையாறு இணைப்பு திட்ட அறிக்கையை, தமிழக நீர்வளத் துறையிடம், மத்திய நீர்வள ஆணையம் ஒப்படைத்துள்ளது.கர்நாடகாவில் உற்பத்தியாகும் பெண்ணையாறு, தமிழகத்தில் 320 கி.மீ., பயணித்து, வங்கக் கடலில் கலக்கிறது. இதன் வாயிலாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய ஐந்து மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல,
பாலாறு, பெண்ணையாறு, இணைப்பு

சென்னை: பாலாறு - பெண்ணையாறு இணைப்பு திட்ட அறிக்கையை, தமிழக நீர்வளத் துறையிடம், மத்திய நீர்வள ஆணையம் ஒப்படைத்துள்ளது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பெண்ணையாறு, தமிழகத்தில் 320 கி.மீ., பயணித்து, வங்கக் கடலில் கலக்கிறது. இதன் வாயிலாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய ஐந்து மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல, கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தில் நுழைந்து, 222 கி.மீ., பயணித்து, வங்கக் கடலில் கலக்கிறது. இதன் வாயிலாக, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் பெறுகின்றன.


latest tamil news
250 கோடி ரூபாய் தேவை


ஆந்திர மாநிலத்தில் பாயும் பாலாற்றில், 28 சிறிய மற்றும் பெரிய தடுப்பணைகளை, அம்மாநில அரசு கட்டியுள்ளது. இதனால், தமிழகத்தில், பாலாறு வறண்டு கிடப்பதால், சாகுபடி மட்டுமின்றி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றில் கிடைக்கும் உபரி நீரை, பாலாற்றிற்கு திருப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 'பாலாறு - பெண்ணையாறு இணைப்பு திட்டம்' மறைந்த ஜெயலலிதாவால், 2012ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றினால், பாலாறு பாயும் மாவட்டங்கள் மட்டுமின்றி, சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ், பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனுார் அணை வெள்ள உபரி நீரை, பாலாற்றின் கிளை ஆறான செய்யாறுக்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, சாத்தனுார் அணையில் இருந்து, 35 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு, 250 கோடி ரூபாய் தேவைப்படும் என, முன்பு மதிப்பிடப்பட்டது.


latest tamil news
திட்ட அறிக்கை


மத்திய அரசிடம் நிதி பெற, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; ஆனால், கிடைக்கவில்லை. எனவே, மாநில அரசின் நிதியில் திட்டத்தை செயல்படுத்த, 2015ல் ஜெயலலிதா முடிவெடுத்தார். அவரது மறைவிற்கு பின் திட்டத்தை செயல்படுத்த, இ.பி.எஸ்., அரசு கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசு நிதியில், திட்டத்தை செயல்படுத்த முயற்சி மட்டுமே நடந்தது. இதையடுத்து, 2018ல் இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக, மத்திய நீர்வள ஆணையம் வாயிலாக, நேரடியாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த திட்ட அறிக்கை, தமிழக நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கையை, தமிழக நீர்வளத் துறை தயாரிக்க வேண்டும். அப்போது தான், இத்திட்டத்திற்கு எவ்வளவு நிதி தேவைப்படும்; எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்ற, துல்லியமான விபரங்கள் கிடைக்கும். அரசின் ஒப்புதல் கிடைத்த உடன், இப்பணிகளை துவங்குவதற்கு, நீர்வளத் துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர்.


latest tamil news
குழப்பம்


அதேநேரம், தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டத்தை போல, மாநில அரசே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விரும்புகிறார். மத்திய அரசு நிதி ஒதுக்கி தந்தால் போதும் என்றும், அவர் சமீபத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

'விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்' என, மத்திய அமைச்சர் கறாராக கூறி விட்டதாக தெரிகிறது. திட்டத்தை செயல்படுத்துவதில், மத்திய மாநில அரசுகள் இடையே, ஆரம்பத்திலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாலாறு - பெண்ணையாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி, பொது மக்கள் மற்றும் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
15-ஜூலை-202117:33:15 IST Report Abuse
M  Ramachandran என்ன காராஜர் போனால் ஒருவர் பிறக்க வேண்டுமா? மஞ்சதுண்டு கருணாநிதி யே ஆசியா பேராசிங் பேச்சுகளால் அவர் உயிரோடிருந்தால் . இப்பேற்பட்ட கேவலங்கள் இருக்கும் காலத்தில் பிறந்ததிற்கு மனம் வெட்கி உயிர் நீத்திருப்பார்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
15-ஜூலை-202117:29:37 IST Report Abuse
M  Ramachandran அதை விட மிக முக்கியம் ஒன்றிய அரசு பிரச்சனை. யிருக்கறதல்லாம் இருக்கட்டும் கிழவனை தூக்கி மனையில் வை என்பதற்கேர்ப்ப ஒன்றிய அரசு என்ற பிரச்சனை சுடலினுக்கு முக்கிய பிரச்சனையாக தோன்றுகிறது. கோவிட பிரச்சனையெல்லாம் ஒரு பிரச்னையா.ஊர் ரெண்டு பட்டாலே கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.இந்த அரசும் அவர்களை வைத்து தானே பகடை ஆடுகிறது.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
15-ஜூலை-202116:37:54 IST Report Abuse
JeevaKiran ஆந்திர மாநிலத்தில் பாயும் பாலாற்றில், 28 சிறிய மற்றும் பெரிய தடுப்பணைகளை, அம்மாநில அரசு கட்டியுள்ளது. இத்தனைக்கும் இந்த ஆறு வெறும் 29 கி.மீ தான் பாய்கிறது ஆந்திராவில். அங்கு உள்ள அரசியல் வாதிகளுக்கு அவங்க மக்கள் மீது அக்கறை உள்ளது. தமிழ் நாட்டில் 222 கி.மீ தூரம் பாய்கிறது . ஒரு தடுப்பணைகூட கிடையாது. நாம் என்ன செய்தோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X