அய்யோ பாவம்... அவர் தலையில் நிறைய பொறுப்புகளை சுமத்தாதீர்...

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
மண்ணின் பெருமையை காக்க இன்னுயிரை ஈந்த தலைவர்களின் பெருமையை காக்க, முதல்வர் ஸ்டாலின் தவற மாட்டார். அவர்களின் பெருமையை தி.மு.க., அரசு காப்பாற்றும். தமிழ் மண்ணின் பெருமையை, ஸ்டாலின் எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்.- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி'அய்யோ பாவம். அவர் தலையில் நிறைய பொறுப்புகளை சுமத்தாதீர். தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும்,
அய்யோ பாவம்... அவர் தலையில் நிறைய பொறுப்புகளை சுமத்தாதீர்...

மண்ணின் பெருமையை காக்க இன்னுயிரை ஈந்த தலைவர்களின் பெருமையை காக்க, முதல்வர் ஸ்டாலின் தவற மாட்டார். அவர்களின் பெருமையை தி.மு.க., அரசு காப்பாற்றும். தமிழ் மண்ணின் பெருமையை, ஸ்டாலின் எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி


'அய்யோ பாவம். அவர் தலையில் நிறைய பொறுப்புகளை சுமத்தாதீர். தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும், 'முதல்வர் ஸ்டாலின் அதை செய்வார்; இதை செய்வார்' என்கின்றனர். எதைத் தான் செய்ய அவருக்கு நேரம் இருக்குமோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி பேட்டி.


ராமாயண, மஹாபாரத நீதி நுால்கள் அரேபிய நாடுகளின் பள்ளி பாடத்தில் இனி இருக்கும். பகுத்தறிவு, கூவத்தில் முதலை, படிஅரிசி திட்டம், விஞ்ஞான ஊழல் போதனைகள், மானாட மயிலாட போன்றவை, தமிழக பாடநுால்களில் இருக்கும். மாணவர்களின் ஆற்றல், அறிவை காலியாக்கும்.
- தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்


'பாடநுால் நிறுவன தலைவராக லியோனி பொறுப்பேற்றதால், கோபம் கொப்பளிக்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.


பண்பாட்டு ரீதியாகவே தமிழர்களுக்கும், சிங்கப்பூருக்கும் நுாற்றாண்டு கால நெருங்கிய தொடர்புண்டு. பல ஆண்டு காலம் வங்கியாளராக அங்கு பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. தற்போது அமைச்சராக, அந்நாட்டு துாதரக அதிகாரிகளை சந்திப்பதும், தமிழகத்தின் வளர்ச்சி குறித்து உரையாடியதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
- தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்


'அந்நாட்டில் சீனர்கள், மலாய், தமிழர்கள் என்ற இன பேதம் கிடையாது. அப்படி பேசினால், உள்ளே பிடித்து வைத்து விடுவர். அதுபோல, நம்ம நாட்டிலும் வரவேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் அறிக்கை.நேபாளத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள காங்கிரசின் ஷேர் பகதுார் துாபா, முந்தைய கம்யூ., அரசின் இந்திய அரசுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட நேபாள எல்லையை இனி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி


latest tamil news
'இந்தியா மீது தான் உங்களுக்கு எவ்வளவு பாசம்... ஆனால், இந்தியாவின் முக்கிய தலைவர்களை மட்டும் பிடிக்கவில்லையே ஏன்...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி அறிக்கை.


இந்த ஆண்டுக்கான, மருத்துவத்திற்கான, 'நீட்' தேர்வை ரத்து செய்து, தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'நீங்கள் சொன்னதும் ரத்து செய்ய, மத்தியில் என்ன, தி.மு.க., ஆட்சியா நடக்கிறது...' என கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஜூலை-202103:59:09 IST Report Abuse
meenakshisundaram கனி இன்னா சொல்றாரு ? ஸ்டாலின் கிட்டே உள்ள பொறுப்பை கொஞ்சம் குறைச்சு என்கிட்டே கொடுங்கன்னு சொல்றாரா?உதவா நிதி சபரீசன் தாண்டி இவரால் 'வேலை 'செய்ய முடியுமா ?ஏதோ கத்தாமலிருக்க வேண்டும் .மேலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் (?) எண்ணிக்கை அதிக மாக இருக்கும் தூத்துக்குடி தொகுதிக்கேன்றே மட்டும் இவரை திமுக இன்றுவரை உபயோகித்து வருகிறது -ஜாதியை ஒழிப்போம் என்னும் திமுக
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
18-ஜூலை-202123:30:50 IST Report Abuse
madhavan rajanதேர்தலுக்கு முன்னாள் பெரியார் மண் என்று பேசிவந்த கணியக்கா இப்போது தமிழ் மண் என்று கூறுகிறாரே. மண்ணை மாற்றிவிட்டார்களோ? பெரியார் தமிழர் அல்ல. அவருடைய மண் நிச்சயம் தமிழ் மண் அல்ல. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர் பெரியார். ஒருவேளை திராவிட மண் தான் பெரியார் மண்ணாக இருக்கும். தமிழ் மண் வேறு....
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
15-ஜூலை-202119:23:52 IST Report Abuse
Narayanan இப்போது ஸ்டாலின் இருக்கும் நிலையில் திருமால்வளவன் மட்டும் அல்லாது அவரின் கூட்டணி கட்சித்தலைவர்கள் சொன்னார்கள் என்று எதையும் செய்துவிடமாட்டார் . அவர் என்ன எடப்பாடியாரா ? அவர் முதல்வராக இருந்த சமயத்தில் எந்த கட்சிக்காரர்கள் சொன்னாலும் அதை செய்தார் . ஊரை அடித்து உலையில் போடும் திருமால்வளவன் .
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-ஜூலை-202118:33:13 IST Report Abuse
RajanRajan தமிழ் மண்ணின் பெருமையை, ஸ்டாலின் எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார். சும்மாவா சோழியன் குடுமின்னான். தமிழ் மக்கள் பணம் கோடிகோடியா கொட்டி உங்க திருக்குவளை குடும்பத்தை உலகமகா கோடீஸ்வரர்களாக்கி மணிமண்டபம் கட்டி கொடுக்கிறோமுல்லே. இப்படி தான் கனிய கனிய இன்னும் அஞ்சு வருசத்துக்கு பேசோணும் சமர்த்தா சுருட்டுறத சுருட்டிக்கணும் சரியா தாயி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X