ஒரு லட்சம் கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய்: மத்திய அரசு பெருமிதம்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் கிராமங்கள் மற்றும் 50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி ஜல் சக்தி அமைச்சகம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.ஜல் சக்தி எனப்படும் மத்திய குடிநீர் அமைச்சகம், மக்களுக்கு சுகாதாரமான மற்றும் போதுமான குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம் என்ற ஒன்றை தொடங்கியது. இத்திட்டத்தை 2019 சுதந்திர
OneLakh Villages, TapWater Connections, Jal Jeevan Mission, Centre, கிராமங்கள், குடிநீர் குழாய், ஜல் ஜீவன் திட்டம், மத்திய அரசு

புதுடில்லி: ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் கிராமங்கள் மற்றும் 50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி ஜல் சக்தி அமைச்சகம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

ஜல் சக்தி எனப்படும் மத்திய குடிநீர் அமைச்சகம், மக்களுக்கு சுகாதாரமான மற்றும் போதுமான குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம் என்ற ஒன்றை தொடங்கியது. இத்திட்டத்தை 2019 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கிராமப்புற குடியிருப்புகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது இதன் நோக்கம். இந்த மெகா திட்டத்திற்காக ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. திட்டம் தொடங்கப்பட்டபோது, நாட்டின் 18.94 கோடி கிராமப்புற வீடுகளில் 3.23 கோடி (17 சதவீதம்) மட்டுமே குழாய் இணைப்பு கொண்டிருந்தது.


latest tamil news


இது பற்றி ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கோவிட் தொற்று மற்றும் ஊரடங்கு இருந்த போதும், ஜல் ஜீவன் திட்டம் கடந்த 23 மாதங்களில் புதிதாக 4.49 கோடி குழாய் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. மேலும் 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் வீடுகள் தோறும் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அளித்து ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. 71 மாவட்டங்கள், 824 வட்டங்கள், 50,309 கிராம பஞ்சாயத்துகளில், 1,00,275 கிராமங்கள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற இலக்கை அடைந்துள்ளன. இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan Periyasamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-202118:08:19 IST Report Abuse
Krishnan Periyasamy அடப்பாவிங்கள என்னமோ ப்ரீயா கொடுத்த மாதிரி நியூஸ் போடுறீங்க. எங்க கிராமத்தில் பஞ்சாயத்தில் இருந்து இணைப்புக்கு ரூபாய் மூன்று ஆயிரம் வாங்கீட்டாங்க மேலும் மதம் ஐம்பது ரூபாய் வரி போட்டு இருக்காங்க.......
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
15-ஜூலை-202120:11:12 IST Report Abuse
suresh kumarமூன்றாயிரம் ரூபாயில் உங்கள் வீட்டு இணைப்பிற்குத் தேவையான குழாய் மற்றும் திறப்பான் வாங்கிவிட முடியுமா? நீங்கள் குடுத்த பணத்திற்கு முழுவதற்கும் ரசீது கிடைத்ததா?...
Rate this:
Cancel
15-ஜூலை-202116:31:35 IST Report Abuse
அப்புசாமி படத்தைப் பாருங்க. எல்லோருக்கும் வூடு திட்டத்தில் பிரம்மாண்ட குடிசை கட்டிக் குடுத்திருக்காங்கோ...
Rate this:
Cancel
15-ஜூலை-202116:29:02 IST Report Abuse
அப்புசாமி செய்தியில் எந்த மாநிலத்தில் எந்த கிராமத்தில் குடிநீர் இணைப்பு புதுச குடுத்தாங்கன்னு தகவலே இல்லை. தமிழகத்திலாவது நாலு கிராமங்கள் பேரைச் சொல்லிங்கப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X