இந்தியாவில் மேலும் 39 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பிலிருந்து நலம்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 39 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,806 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 09 லட்சத்து 87 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 39,130 பேர் கோவிட்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 39 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,806 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 09 லட்சத்து 87 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 39,130 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 01 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.32 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 581 பேர் கோவிட் தொற்றுக்கு பலியானார்கள்; இதுவரை 4,11,989 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.28 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.39 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (ஜூலை 15) காலை 8 மணி நிலவரப்படி 39.13 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 34,97,058 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news





உலக பாதிப்பு


இன்று (ஜூலை 15-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 18 கோடியே 91 லட்சத்து 78 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சத்து 74 ஆயிரத்து 555 பேர் பலியாகினர். 17 கோடியே 28 லட்சத்து 05 ஆயிரத்து 144 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
15-ஜூலை-202114:17:51 IST Report Abuse
SUDHAKAR வெகு நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது கவனம் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X