இந்தியா - ரஷ்யா உறவுக்கு வானமே எல்லை: ரஷ்ய தூதர்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: 'இந்தியா - ரஷ்யா இடையிலான உறவின் விரிவாக்கத்துக்கு வானமே எல்லை' என, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் தெரிவித்துள்ளார்.இந்தியா - ரஷ்யா இடையே நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து இருதரப்பு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டிலியில் நடைபெற்றது. இந்த மாநாடு குறித்து ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில்
Sky, Russia,India, strategic partnership, Russian envoy, இந்தியா,  ரஷ்யா, உறவு, வானமே எல்லை, ரஷ்ய தூதர்,

புதுடில்லி: 'இந்தியா - ரஷ்யா இடையிலான உறவின் விரிவாக்கத்துக்கு வானமே எல்லை' என, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் தெரிவித்துள்ளார்.இந்தியா - ரஷ்யா இடையே நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து இருதரப்பு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டிலியில் நடைபெற்றது. இந்த மாநாடு குறித்து ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் தெரிவித்துள்ளதாவது:latest tamil newsஇந்தியாவில் நடைபெற உள்ள மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்க உள்ளதையடுத்து இந்த மாநாடு குறித்து இருநாட்டின் அமைச்சகத்தினரிடையே விவாதிக்கப்பட்டது.இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்தும் பேசப்படும். இந்த மாநாடு இரு நாடுகளுக்கிடையே பெரிய அத்தியாயமாக இருக்கும். மேலும், கோவிட் பரவலைத் தடுப்பது தொடர்பான விவாதமும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும்.latest tamil newsதொற்றுக்கு எதிராக ரஷ்யாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஒட்டுமொத்தமாக ரஷ்யா - இந்தியா இடையே ஒத்துழைப்பிலும், உறவின் விரிவாக்கத்திலும் வானமே எல்லையாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்ந்து 20 ஆண்டுகளாக இந்த உச்சி மாநாட்டுக் கூட்டங்கள் இந்தியாவிலும், ரஷ்யாவிலும் மாறி, மாறி நடைபெற்று வருகின்றன. கோவிட் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூலை-202113:29:12 IST Report Abuse
குமார் சரிப்பா ,தாடி குத்துதுப்பா.
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
15-ஜூலை-202115:23:49 IST Report Abuse
Vena Sunahahaha...
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-ஜூலை-202112:19:30 IST Report Abuse
mindum vasantham பல தரப்பட்ட உறவை இந்தியா பயன்படுத்துகிறது ரஷ்யா , அமெரிக்கா என்ற இரு நாடுகளுடன் நட்பு மலர்ந்துள்ளது
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூலை-202111:53:23 IST Report Abuse
Pugazh V கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளைக் காற்றில் பறக்க விடும் முதல் ஆளே நம்ம பிரதமர் தான். ஆனால் பாருங்கள்... தமிழக முதல்வர் சைக்கிள் ஓட்டும் போது மாஸ்க் போடல என்று ஒரு நாள் முழுக்க 136 கமெண்ட் போட்டாங்க. அவங்கல்லாம் இன்னிக்கு ஆப்ஸென்ட். ஹய்யோ..ஹய்யோ...
Rate this:
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
15-ஜூலை-202120:27:48 IST Report Abuse
shaktiபழைய போட்டோ அது பாய்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X