பொது செய்தி

இந்தியா

எல்லையில் அமைதி: சீனாவிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: எல்லையில் அமைதி நிலவினால் தான், இரு நாடுகள் இடையே உறவு மேம்படும் என சீன வெளியுறவு அமைச்சரிடம், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் ஷாங்காய் கூட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு பின் இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இருவரும்
india, china, jaishankar, foreign Minister, wangyi, இந்தியா, சீனா, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர், வாங் யீ

புதுடில்லி: எல்லையில் அமைதி நிலவினால் தான், இரு நாடுகள் இடையே உறவு மேம்படும் என சீன வெளியுறவு அமைச்சரிடம், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் ஷாங்காய் கூட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு பின் இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


latest tamil news


இதன் பிறகு ஜெய்சஙகர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சீனாவுடன் மேற்கு பகுதியில் நீடிக்கும் எல்லை பிரச்னை குறித்து அந்நாட்டு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். எல்லை பகுதிகளில் சீனா தன்னிச்சையாக நிலைப்பாட்டை மாற்றி வருவதை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. எல்லையில், முழுமையான மறுசீரமைப்பும், அமைதியும் நிலவினால் தான் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படும். எல்லை பிரச்னைக்கு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு நாடுகளும் ஒப்பு கொண்டு உள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் தொடர்ந்து நிலவும் பிரச்னையால் இரு நாடுகளின் நல்லுறவு பாதிக்கப்படுவது கண்கூடாக தெரிகிறது. இது இரு நாடுகளுக்கும் நல்லதல்ல. இதனால், எல்லையில், ஸ்திரத்தன்மை ஏற்படவும், தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனவும் இரு நாடுகளும் ஒப்பு கொண்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-202109:26:03 IST Report Abuse
அப்புசாமி சூப்பரா போஸ் குடுக்கிறாங்க. அங்கே எல்லையில் படைவீரர்கள் அடிச்சுக்கிட்டு சாவுறாங்க. ஆத்மநிர்பரா கீழே சீனாவிலிருந்து இறக்குமதி கொடி கட்டி பறக்குது. மாமல்லபுரர்தில் குத்தாட்டத்துக்கு குறைச்சலில்லே...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-ஜூலை-202114:16:18 IST Report Abuse
RajanRajan GOOD APPROACH. நமது குறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித் - பல்டிஸ்ட்தான் சில்க் வே நம் வசமாக சீனாவுடன் சுமூக ராஜதந்திர பேச்சு வார்த்தை மூலம் அந்த பாகிஸ்தான் கடன் தொகையை நாம் ஈடுகட்டும் நிலைப்பாடு மூலம் மொத்தமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் தலிபான் வசமாவதால் இந்த சில்க் வே அதிக முக்கியத்துவமடைகிறது. திரு . ஜெய்சங்கர் முன்னிலையில் நம் வெளியுறவு துறை வெற்றி காண வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X