தைவானில் 2 மணி நேரத்தில் 22 முறை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தைபே: கிழக்கு தைவானில் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூலியன் கவுண்டி நகரத்தில் நேற்று தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின. காலை 6:52 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்ததடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர்

தைபே: கிழக்கு தைவானில் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.



latest tamil news



தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூலியன் கவுண்டி நகரத்தில் நேற்று தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின. காலை 6:52 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்ததடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவான முதல் நிலநடுக்கம், இதர பகுதிகளில் 3 முதல் 5 ஆகப் பதிவானது. 2 மணி நேரத்தில் தொடர்ச்சியான 22 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.


latest tamil news




ரஷ்யாவில் 5.4


இதேபோல், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-202119:43:03 IST Report Abuse
Rajagopal சீனாக்காரன் ஏதாவது புதிதாக செய்கிறானா என்று பாருங்கள். அவர்கள் இந்த மாதிரி புதிய ஆயுதங்கள் கண்டுபிடித்து வருகிறார்கள். நிலநடுக்கம் ஏற்படுத்த வல்ல ஆயுதங்கள் ஒருவேளை அவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
15-ஜூலை-202117:56:10 IST Report Abuse
Marai Nayagan இயற்கையுடன் இயைந்து வாழதல் வேண்டும்
Rate this:
Cancel
-  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202114:06:19 IST Report Abuse
  ₹ இன்று இன்னும் சில மணி நேரங்களில் சூரியனிலிருந்து சோலார் புயல் விநாடிக்கு 500 கி.மீ வேகத்தில் வந்து பூமி மேல் தாக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. ஒட்டு மொத்த உலகின் மின்சாரம் துண்டிப்புக்குள்ளாகலாம் என்று அறிவிக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X