பொது செய்தி

இந்தியா

கோவிட் தொற்றால் உயிரிழந்தோருக்கு வேளான் கடன் தள்ளுபடி: கர்நாடக அரசு அறிவிப்பு

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு: கோவிட் தொற்றால் உயிரிழந்த விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்து உள்ளதாவது: குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு

பெங்களூரு: கோவிட் தொற்றால் உயிரிழந்த விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்து உள்ளதாவது: குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ கர்நாடகாவில் பிபிஎல் அட்டைதாரர் (வறுமை கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கான ரேஷன் அட்டை) குடும்பத்தில் தொற்றுக்கு பலியானோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.


latest tamil news




10,187 விவசாயிகள் பலி


கோவிட் வைரஸ் தொற்றால் விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் தொற்றால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளான் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் 2020 - 21 ஆம் நிதி ஆண்டில் 25.67 லட்சம் விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.17 ஆயிரத்து 108 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றினால் உயிரிழந்து உள்ளனர். எனவே அவர்களின் குடும்பத்தின் நிதி சுமையை குறைக்கும் வகையில் இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
15-ஜூலை-202118:54:43 IST Report Abuse
DVRR 10,187 விவசாயிகள் ரூ 1 லட்சம் கடன் என்றாலும் அதுவே ரூ 101.87 கோடி ஆகுது ஆனால் தள்ளுபடி ரூ. 79.47 கோடி மட்டும் தானா??அப்போ ரூ 1 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்கியிருக்கின்றார்கள் என்று அர்த்தம். பாவம் இந்த ஏழை விவசாயிகள்????இன்னும் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும். இவர்கள் ஏழை விவசாயிகள் ஆனால் நாம் விவசாயிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த இடை தரகர்கள் டில்லி எல்லையில் வேளாண் சட்ட எதிர்ப்பு செய்கின்றேன் என்று ஏசி வண்டியில் படுத்து ரெகார்ட் டான்ஸ் பார்த்து வேள வேலைக்கு நல்ல ஸ்வீட் காரம் தின்னும் இவனுங்க யார்????நாங்கள் விவசாயிகள்????இந்த விவசாயிக்கும் அந்த இடைத்தரகர் விவசாயிக்கும் வித்தியாசம் தெரிகின்றதா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X