டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்; நீச்சல் வீரர்களுக்கு சிக்கல்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்தாலும் இன்னும் 8 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஒலிம்பிக் கமிட்டியும் ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசும் போட்டிக்கு முன்னேற்பாடுகள் செய்ய ஆயத்தமாகி வருகின்றன.இம்முறை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு ஜப்பான் அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் போட்டிகள் நடைபெறும்
டோக்கியோ, ஒலிம்பிக் போட்டிகள், நீச்சல் வீரர், சிக்கல்

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்தாலும் இன்னும் 8 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஒலிம்பிக் கமிட்டியும் ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசும் போட்டிக்கு முன்னேற்பாடுகள் செய்ய ஆயத்தமாகி வருகின்றன.

இம்முறை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு ஜப்பான் அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் போட்டிகள் நடைபெறும் இடத்தில் அதீத சமூக விலகல் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


டோக்கியோ பே பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலையை சுத்தம் செய்ய அப்பகுதி மக்கள் முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் இந்த நீர் நிலையில் கழிவுகள் கலப்பதால் அசுத்தமாக உள்ளது. இதில் ஒலிம்பிக் நீச்சல் வீரர்கள் எவ்வாறு நீந்த முடியும் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X