பொது செய்தி

இந்தியா

நீட் தேர்வில் விலக்கு: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் மனு

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும்; கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் இன்று டில்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை சந்தித்து
NEET exam,medical entrance test,நீட்

புதுடில்லி: தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும்; கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் இன்று டில்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை சந்தித்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தமிழகத்திற்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தார்.

இதனை தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசிய மா.சுப்ரமணியன், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.


latest tamil news



மத்திய அமைச்சர்களை சந்தித்த பின்னர், மா.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரினோம். அது தொடர்பாக பரிசீலனை செய்வதாக மன்சுக் மாண்டவியா கூறினார். பாடப்பிரிவு வித்தியாசம், ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினோம்.

தமிழகத்திற்கு கூடுதலாக 12 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவில் துவக்க நடவடிக்கை எடுப்பதாகவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தார். கோவிட் இரண்டாவது அலை பாதிப்புகளை சரி செய்ய கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
16-ஜூலை-202106:11:50 IST Report Abuse
கௌடில்யன் கூடுதலாக 12 கோடி தடுப்பூசிகள் ....சுய நினைவில் இருந்தாரா ..
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202122:55:41 IST Report Abuse
rajan ஏம்பா மாசு. சாதாரண கவுன்சிலர் கூட ஆடம்பரமா விலை உயர்ந்த ஆடை அணிந்து கொண்டு கழுத்துல 1/2 கிலோ தங்கச் செயின் கையில கனமான BRACE LET எட்டு விரல்களிலும் கனமான மோதிரங்களுடன் உலா வருகிறான். நீங்க என்னன்னா மந்திரியா இருந்தும் சாதாரண பள்ளிக்கூட வாத்யார் மாதிரி ரொம்ப எளிமையா DRESS செய்து கொண்டு மத்திய அமைச்சரை பார்க்க செல்கிறீர்கள்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202122:09:43 IST Report Abuse
 rajan முடியாது, முடியவே முடியாது. இது தான் தலையாய பிரச்சினையா. அரசு ஆஸ்பத்திரிகள் சுகாதார சீர்கேடாக உள்ளன. தரத்தை மேம்படுத்துங்கள். தேவையின்றி மக்கள் பணத்தில் ஊர் சுற்றாதீர்கள். நீட் நடந்தே தீரும். விலக்கு கிடைக்காது. வேண்டுமானால் நீட் எழுதுபவர்களை தேர்தல் எழுதாமல் புறக்கணிக்க சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X