பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்: மத்திய அரசு

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்தில், கூடுதலாக செங்கல்பட்டு, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்., 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக முன்பதிவு துவங்கியுள்ளது. இந்நிலையில் டில்லியில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
NEET exam, TN, Tamilnadu, medical entrance test, தமிழகம், தமிழ்நாடு, நீட்

புதுடில்லி: தமிழகத்தில், கூடுதலாக செங்கல்பட்டு, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்., 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக முன்பதிவு துவங்கியுள்ளது. இந்நிலையில் டில்லியில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்த பிறகு தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:


latest tamil news


பின்னர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், என்னை சந்தித்து நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார். நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அவரிடம் விளக்கினேன். நீட் தேர்வில், பிராந்திய மொழிகளின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்தும் மலையாளம், பஞ்சாபி மொழிகளை சேர்த்தது குறித்தும் விளக்கினேன். ஏற்கனவே தமிழில் தேர்வு நடத்தப்படுகிறது.


latest tamil news


தமிழக மாணவர்களின் நலனுக்காக, விருதுநகர், திண்டுக்கல், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் கூடுதலாக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது எனவும் மா.சுப்ரமணியத்திடம் விளக்கினேன். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
16-ஜூலை-202108:24:15 IST Report Abuse
Bala Murugan நீட் தேர்வு அவசியமானது என்று சொல்கிறீர்கள். ஆனால் இவ்வளவு கெடுபிடி இருக்கக் கூடாது. நகைகள் எதுவும் அணியாக கூடாது தாலி உட்பட. இந்த மாதிரி ஆடைகள் அணியாக கூடாது என்றெல்லாம் சொல்லி கடைப்பிடிக்கிறார்கள். அற்பமானது கேவலமானது. இப்படி செய்வதற்கு தேர்வு நடத்தாமல் இருக்கலாம்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
16-ஜூலை-202101:02:59 IST Report Abuse
unmaitamil Please change your user name
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
15-ஜூலை-202120:01:50 IST Report Abuse
siriyaar தமிழக இஞ்சினியரிங்க் கல்லூரிகளுக்கும் தகுதி தேர்வு தேவை படித்து முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு AICTE நேரடி தேர்வு நடத்தி தரபரிசோதனை செய்யவேண்டும். 100 க்கு 90 பேருக்கு எதுவும் தெரிவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X