சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

காளானிலிருந்து செயற்கை தோல்!

Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பின்லாந்து விஞ்ஞானிகள், காளான் மூலம் செயற்கைத் தோலை உருவாக்குவதில் வெற்றிகண்டுள்ளனர். சில தாவரங்களை வைத்து தோலைப் போன்ற பொருளை தாயாரிக்கும் தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரத் தொடங்கியுள்ளன.பின்லாந்திலுள்ள வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், காளான் மற்றும் பூஞ்சைகளிலிருந்து தோல் போன்றே ஒரு பொருளை தயாரிக்க முடியும் என
காளானிலிருந்து செயற்கை தோல்!

பின்லாந்து விஞ்ஞானிகள், காளான் மூலம் செயற்கைத் தோலை உருவாக்குவதில் வெற்றிகண்டுள்ளனர். சில தாவரங்களை வைத்து தோலைப் போன்ற பொருளை தாயாரிக்கும் தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

பின்லாந்திலுள்ள வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், காளான் மற்றும் பூஞ்சைகளிலிருந்து தோல் போன்றே ஒரு பொருளை தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.

காளான் தோலைத் தொட்டால் நிஜமான விலங்குத் தோலைத் தொடுவது போன்ற உணர்வைத் தருவதுடன், பலவித சாயங்களில் அதை தோய்த்து எடுத்து அசத்தவும் முடியும்.

பிரம்மாண்டமான உயிரிக் கலன்களில், பூஞ்சைகள் மற்றும் காளான்களை விஞ்ஞானிகள் நொதிக்க வைக்கின்றனர். இத்தகைய திரவ நொதித்தல் முறையில் காளான்களை பதப்படுத்துவதன் மூலம், பெரிய அளவில் செயற்கைத் தோல் உற்பத்தியைச் செய்ய முடியும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர். இதனால், துணி போல நீண்ட தோல்களை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்ய முடியும். இயற்கையான விலங்குத் தோலினை துண்டு துண்டாகவே பதப்படுத்தி தயாரிக்க முடியும். ஆனால், செயற்கையாக தயாரிக்கப்படும் தோலை விரயமாகாமல், பல பொருட்களை தயாரிக்க உதவும்.

மேலும், காளான் தோலை தயாரிக்க எந்த விலங்கும் கொல்லப்படுவதில்லை. தவிர, நச்சுள்ள வேதிப் பொருட்களைக் கொண்டு பதப்படுத்தும் தேவை இல்லை. இதனால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-ஜூலை-202113:40:05 IST Report Abuse
Sridhar இது இந்தோனேஷியா உட்பட பல நாடுகளில் ஏற்கனவே தயாரிக்க பட்டுவருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X