சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உலகின் முதல் 16 டன் மின்சார லாரி

Added : ஜூலை 15, 2021
Share
Advertisement
பயணியர் வாகனங்களில் மட்டுமல்ல, சரக்கேற்றும் வாகனங்களிலும் மின்சார இயந்திரங்கள் வந்துவிட்டன. லண்டனைச் சேர்ந்த 'புத்திளம்' நிறுவனமான 'வோல்ட்டா டிரக்ஸ்', அடுத்த மூன்று ஆண்டுகளில் நான்கு அளவுகளில் மின்சார லாரிகளை தயாரிக்க சோதனைகளை நடத்தி வருகிறது.அண்மையில் முக்கிய ஐரோப்ப நகர்களில் விளக்கக் காட்சிகளை நடத்தியிருக்கிறது வோல்ட்டா. குறிப்பாக ஒரு முறை சார்ஜ்
உலகின் முதல் 16 டன் மின்சார லாரி

பயணியர் வாகனங்களில் மட்டுமல்ல, சரக்கேற்றும் வாகனங்களிலும் மின்சார இயந்திரங்கள் வந்துவிட்டன. லண்டனைச் சேர்ந்த 'புத்திளம்' நிறுவனமான 'வோல்ட்டா டிரக்ஸ்', அடுத்த மூன்று ஆண்டுகளில் நான்கு அளவுகளில் மின்சார லாரிகளை தயாரிக்க சோதனைகளை நடத்தி வருகிறது.

அண்மையில் முக்கிய ஐரோப்ப நகர்களில் விளக்கக் காட்சிகளை நடத்தியிருக்கிறது வோல்ட்டா. குறிப்பாக ஒரு முறை சார்ஜ் செய்தால், 200 கி.மீ வரை செல்லும் 'வோல்ட்டா ஜீரோ' என்ற வண்டி, உலகிலேயே முதல் 16 டன் தினுள்ள மின்சார லாரி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லும் வோல்ட்டா ஜீரோ வண்டி, நகருக்குள் சரக்குகளை டெலிவரி செய்யும் பணிக்கு பொருத்தமானது. பாதுகாப்புக்காக, 360 டிகிரி கோணத்திலும் பார்க்கும் திறன்கொண்ட 'கேமரா'க்களை இதில் பொருத்தியுள்ளனர்.இலகுவான எடையும், அதிராத மோட்டார்களும் கொண்ட இந்த வண்டி, ஓட்டுநர்களுக்கு அயற்சியைத் தராதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில், பல நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கு சற்று அதிகமான அளவுக்கு முன்பதிவைப் பெற்றுள்ளது வோல்ட்டா ஜீரோ.வரும் 2025 வாக்கில் மின்சார லாரிகளின் சந்தை 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பெரியதாக ஆகிவிடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆக, மின்சார லாரிகளின் வரத்து தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X