தாலிபான்களுடன் அணுக்கமாகச் செல்லும் சீனா; காரணம் என்ன?

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
பெய்ஜிங்: தாலிபன் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. இது தாலிபானின் வெற்றியாக பார்க்கப்பட்டது. இதனை அடுத்து சீனா மகிழ்ச்சி

பெய்ஜிங்: தாலிபன் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. இது தாலிபானின் வெற்றியாக பார்க்கப்பட்டது. இதனை அடுத்து சீனா மகிழ்ச்சி அடைந்தது.



latest tamil news



சீனா ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லை 76 கிலோமீட்டர் தூரம் கொண்டது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள சீன மாகாணம் ஜின்ஜியாங். இங்கு பழங்குடி இன மக்கள் அதிகம்பேர் வசித்து வருகின்றனர். இந்தப் பழங்குடி இன பிரிவினைவாதிகள் பலர் ஆப்கானிஸ்தானில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து சீனாவில் தங்கள் சமுதாய மக்களுக்கு நிலவும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் சீனா தனது தொழில்களை விரிவுபடுத்த நினைக்கிறது.
2019ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் முக்கிய தலைவர்களுடன் சீன வெளியுறவுத்துறை கூட்டம் ஒன்றை நடத்தியது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுவதுமாக ஆக்கிரமித்தாலும் அவர்களுடன் நட்பு பாராட்ட நினைக்கிறது.


latest tamil news



பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சீன கம்யூனிச அரசு தலைவர்கள் தாலிபான்களை பகைத்துக் கொள்ளாமல் அவர்களுடன் அணுக்கமாக செல்லவே விரும்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-202109:17:49 IST Report Abuse
அப்புசாமி ஆப்கானிஸ்தானத்தை முன்னேத்துறேன்னுட்டு 15 வருஷம் போராடுனதுதான் மிச்சம்.இதுவரை சுமார் 200 பில்லியன் டாலர்களச் செலவழிச்சாலும் மூர்க்கர்களைத் திருத்த முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சு. வாபஸ் வாங்கிடுச்சு. சீனாக்காரன் அப்பிடி இல்லை.ஆப்கானிஸ்தானையே சுரண்டிடுவான். ஏற்கனவே பட்டினியா இருக்கும் ஆப்கானிஸ்தான் கொலைப்பட்டினி ஆயிரும்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-ஜூலை-202107:07:15 IST Report Abuse
Sanny வேறு என்ன இந்தியாவுக்கு ஆப்படிக்கத்தான் வளைத்துபோடுது. ஸ்ரீலங்கா சீன கைக்குள், இனி....?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஜூலை-202107:00:29 IST Report Abuse
Kasimani Baskaran தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்தாலும் கொடுப்பார்கள். இந்தியாவை எப்படியாவது கடித்துத் துப்பிவிடுவது என்ற முடிவில் இருக்கிறார்கள்.. ஆனால் அதற்கு என்ன விலை கொடுக்கப்போகிறோம் என்றுதான் அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X