தாலிபான்களுடன் அணுக்கமாகச் செல்லும் சீனா; காரணம் என்ன?| Dinamalar

தாலிபான்களுடன் அணுக்கமாகச் செல்லும் சீனா; காரணம் என்ன?

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (19) | |
பெய்ஜிங்: தாலிபன் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. இது தாலிபானின் வெற்றியாக பார்க்கப்பட்டது. இதனை அடுத்து சீனா மகிழ்ச்சி

பெய்ஜிங்: தாலிபன் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. இது தாலிபானின் வெற்றியாக பார்க்கப்பட்டது. இதனை அடுத்து சீனா மகிழ்ச்சி அடைந்தது.



latest tamil news



சீனா ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லை 76 கிலோமீட்டர் தூரம் கொண்டது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள சீன மாகாணம் ஜின்ஜியாங். இங்கு பழங்குடி இன மக்கள் அதிகம்பேர் வசித்து வருகின்றனர். இந்தப் பழங்குடி இன பிரிவினைவாதிகள் பலர் ஆப்கானிஸ்தானில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து சீனாவில் தங்கள் சமுதாய மக்களுக்கு நிலவும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் சீனா தனது தொழில்களை விரிவுபடுத்த நினைக்கிறது.
2019ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் முக்கிய தலைவர்களுடன் சீன வெளியுறவுத்துறை கூட்டம் ஒன்றை நடத்தியது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுவதுமாக ஆக்கிரமித்தாலும் அவர்களுடன் நட்பு பாராட்ட நினைக்கிறது.


latest tamil news



பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சீன கம்யூனிச அரசு தலைவர்கள் தாலிபான்களை பகைத்துக் கொள்ளாமல் அவர்களுடன் அணுக்கமாக செல்லவே விரும்புகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X