சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நீதி கிடைக்குமா?

Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நீதி கிடைக்குமா?'அவசரப்பட்டு முடிவு எடுத்தால் இப்படித் தான் நடுத்தெருவில் நிற்க வேண்டும்' என, லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பஸ்வானை பார்த்து பரிதாபப் படுகின்றனர் பீஹார் மக்கள். இவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், சில மாதங்களுக்கு முன் மறைந்தார். தந்தை இறந்ததால், சிராக் கைக்கு கட்சி தலைமை பதவி வந்தது. ஆனால் போதிய

அக்கம் பக்கம்


நீதி கிடைக்குமா?



'அவசரப்பட்டு முடிவு எடுத்தால் இப்படித் தான் நடுத்தெருவில் நிற்க வேண்டும்' என, லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பஸ்வானை பார்த்து பரிதாபப் படுகின்றனர் பீஹார் மக்கள். இவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், சில மாதங்களுக்கு முன் மறைந்தார். தந்தை இறந்ததால், சிராக் கைக்கு கட்சி தலைமை பதவி வந்தது. ஆனால் போதிய அனுபவம் இல்லாததாலும், 'ஜால்ரா'க்களின் பொய்களை நம்பியும், மோசம் போய் விட்டார் அவர்.கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்தார்; மத்தியில் உள்ள பா.ஜ., அரசையும் பகைத்தார்.
இப்போது நிதிஷ் குமார், தன் வேலையை காட்ட துவங்கி விட்டார். சிராகின் சித்தப்பாவை வைத்தே கட்சியை உடைத்தார். 'நாங்கள் தான் உண்மையான லோக் ஜன சக்தி கட்சி. சிராக் பஸ்வான் தனி ஆள்' என, சிராகின் சித்தப்பா பசுபதி குமார் பரஸ் போர்க்கொடி துாக்கவே, கட்சியில் இருந்த ஒட்டுமொத்த நிர்வாகிகளும், அவர் பக்கம் சென்று விட்டனர்.

சிராகை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும் அறிவித்துள்ளனர். பரஸ், இப்போது மத்திய அமைச்சராகவும் ஆகி விட்டார். 'வாலைச் சுருட்டி ஒழுங்காக இருந்திருந்தால், அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். இப்போது கட்சியும் போய் விட்டது; பதவியும் போய் விட்டது. சிராக், நடுத்தெருவில் நிற்கிறார்' என்கின்றனர் லோக் ஜன சக்தி கட்சியினர்.சிராக் பஸ்வானோ, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி தேடி, பாத யாத்திரையை துவக்கியுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
16-ஜூலை-202105:05:12 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இவர் அப்பா இருந்த வரையில் இவர் ஆடிய ஆட்டம் என்ன இன்று அதற்கான பலன் என்று கூட நினைக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X