பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜூலை 16, 2009காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில், 1919 மார்ச் 19ம் தேதி பிறந்தவர், டி.கே.பட்டம்மாள்; இயற்பெயர் அலமேலு. 4வது வயதில் பாட துவங்கினார். 1929-ல், முதன்முறையாக வானொலியில் பாடினார். 1932-ல், எழும்பூர் மகளிர் மன்றத்தில் இவரது முதல் கச்சேரி அரங்கேறியது.காங்கிரஸ் கூட்டங்களில் பாடினார். தமிழ் கீர்த்தனைகளை பிரபலமடைய செய்தார். நாடு சுதந்திரம் அடைந்த அன்று இரவு முழுதும்,

இதே நாளில் அன்று


ஜூலை 16, 2009



காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில், 1919 மார்ச் 19ம் தேதி பிறந்தவர், டி.கே.பட்டம்மாள்; இயற்பெயர் அலமேலு. 4வது வயதில் பாட துவங்கினார். 1929-ல், முதன்முறையாக வானொலியில் பாடினார். 1932-ல், எழும்பூர் மகளிர் மன்றத்தில் இவரது முதல் கச்சேரி அரங்கேறியது.காங்கிரஸ் கூட்டங்களில் பாடினார். தமிழ் கீர்த்தனைகளை பிரபலமடைய செய்தார். நாடு சுதந்திரம் அடைந்த அன்று இரவு முழுதும், 'விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளு பாடுவோமே...' போன்ற தேசபக்தி பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார்.
கடந்த, 1939ல் வெளியான தியாக பூமி படத்தில் முதன்முதலாக 'தேச சேவை செய்ய...' என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடினார். 'பக்தி மற்றும் தேசபக்தி பாடல் மட்டுமே பாடுவேன்' என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். பல்வேறு நாடுகளுக்கு சென்று இசை கச்சேரி நிகழ்த்தினார்.'பத்ம பூஷண், பத்ம விபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி' உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 2009 ஜூலை 16ல் தன் 90வது வயதில் காற்றில் கலந்தார்.'தேசியக் குயில்' டி.கே.பட்டம்மாள் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
16-ஜூலை-202112:13:16 IST Report Abuse
vpurushothaman ஏ.வி.எம் -மின் நாம் இருவர் படப் பாடல்களை மறக்க இயலுமா? இசைக்குயில் புகழ் ஓங்குக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X