'நான் பேசுவதும் புரியாமலா போகும்?'

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை:''நான் படித்த திமிரில் பேசவில்லை; கேட்ட திமிரில் பேசுகிறேன்'' என, நடிகர் கமல் கூறினார்.மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், ‛நம்மவர் தொழிற்சங்க பேரவை' நேற்று துவக்கப்பட்டது. பேரவையை துவக்கி வைத்து கமல் பேசியதாவது:கட்சி துவங்கும் போது என் குடும்பத்தார் பதற்றமாகவே இருந்தனர். நான் அவர்களுக்கு சொன்னது, 'நீங்களும் வர வேண்டும்' என்று தான். 'அரசியல் உங்களை
' நான் பேசுவது, புரியாமல்,  போகும்?'

சென்னை:''நான் படித்த திமிரில் பேசவில்லை; கேட்ட திமிரில் பேசுகிறேன்'' என, நடிகர் கமல் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், ‛நம்மவர் தொழிற்சங்க பேரவை' நேற்று துவக்கப்பட்டது. பேரவையை துவக்கி வைத்து கமல் பேசியதாவது:கட்சி துவங்கும் போது என் குடும்பத்தார் பதற்றமாகவே இருந்தனர். நான் அவர்களுக்கு சொன்னது, 'நீங்களும் வர வேண்டும்' என்று தான். 'அரசியல் உங்களை தாக்கியே தீரும். உங்கள் தாக்கம் அரசியலில் இருக்க வேண்டும்' என்றேன்.
இளங்கோவடிகள், கண்ணதாசன், கருணாநிதி ஆகியோர் கூறியது புரியும்போது, நான் பேசுவதும் புரியாமலா போய் விடும். எனக்கு இலவசமாக தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் இவர்கள். இவர்கள் பேசுவது முதலில் புரியாது; புரிந்தால் தமிழ் வாழும். தெரியவில்லை என்றால் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் படித்த திமிரில் பேசவில்லை; கேட்ட திமிரில் பேசுகிறேன். தோல்விகள் ஏற்படும். அதைப் பார்த்து நாம் பதற வேண்டும். தோல்விக்காக ஆறுதல் கூற நிறைய பேர் வந்தனர்; ஆச்சரியப்பட்டேன். எனக்கு காந்தி தலைவரானது ஆச்சரியமானது. ஆனால் இதற்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய வரைபடத்தை கிழிக்க நினைக்கும் எல்லா திட்டங்களையும் முறியடிக்க வேண்டும். காந்தி போன்றோர் தான் இன்றைய தேவை. வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
-  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-202122:48:18 IST Report Abuse
₹ இவரது பேச்சில் கருத்துக்கோர்வை இல்லை. கருத்துக்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக துண்டாடுகிறார். ஒழுங்காக சொல்வதையே இங்குள்ள தமிழன் புரிந்து கொள்ளமாட்டான். இலை மறைவு காய் மறைவாக இரு பொருள் பட பேசுவதை இவர் தவிர வேறெவருககும் புரியாது.
Rate this:
Cancel
-  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-202122:48:19 IST Report Abuse
₹ இவரது பேச்சில் கருத்துக்கோர்வை இல்லை. கருத்துக்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக துண்டாடுகிறார். ஒழுங்காக சொல்வதையே இங்குள்ள தமிழன் புரிந்து கொள்ளமாட்டான். இலை மறைவு காய் மறைவாக இரு பொருள் பட பேசுவதை இவர் தவிர வேறெவருககும் புரியாது.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-ஜூலை-202119:44:24 IST Report Abuse
Vijay D Ratnam கமல் அவர்களே நீங்கள் சாதாரணமாக பேசுவது புரிகிறது. உங்கள் அறிவுஜீவித்தனத்தை தமிழ்ப்புலமையை காண்பிக்கிறேன் என்று பெனாத்துவது பாமர மக்களுக்கு சத்தியமாக புரியாது. உங்கள் குருதிப்புனல் படமும் ரஜினியின் முத்து படமும் ஒரே நாளில் ரிலீசானது. குருதிப்புனல் அற்புதமான படம். இஞ்ச் பை இன்ச் ஆக படத்தை செதுக்கி இருந்தீர்கள். நடிப்பு, காட்சிகள், இசை, ஆர்ட், ஒளிப்பதிவு, பிஜிஎம், தயாரிப்பு, டைரக்ஷன் என்று அற்புதமான படம். அதே ரஜினியின் முத்து அரதப்பழசான கதை. ஆனால் சாதாரண மக்களிடம் எந்தப்படம் பெரிய அளவில் சென்று சேர்ந்தது. எந்தப்படத்தை தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி தீர்த்தார்கள். நீங்கள் அறிவுஜீவிதான் ஒத்துக்கொள்கிறோம். ஒங்க அறிவு ஜீவித்தனத்தை சாதாரண மக்களிடம் காட்டாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X