தமிழ்நாடு

பருவ மழையை பயன்படுத்தி... பசுமை சாலை! ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மரங்களே இல்லாததால், பருவ மழையை பயன்படுத்தி, புதிய மரக்கன்றுகள் நடவு செய்து மீண்டும் பசுமை சாலையாக மாற்ற ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், புதிய மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, வேகமாக மரங்களை
 பருவ மழையை பயன்படுத்தி...  பசுமை சாலை! ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கோவை:கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மரங்களே இல்லாததால், பருவ மழையை பயன்படுத்தி, புதிய மரக்கன்றுகள் நடவு செய்து மீண்டும் பசுமை சாலையாக மாற்ற ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், புதிய மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இதற்காக, வேகமாக மரங்களை வெட்டி சாய்ப்பவர்கள், மீண்டும் அவற்றுக்கு புத்துயிர் தருவதில் முனைப்பு காட்டுவதில்லை. ஒரு காலத்தில் அவிநாசி சாலை, பொள்ளாச்சி உள்ளிட்ட சாலைகளின் இரு புறமும் இருந்த பசுமை மரங்களுக்கு நடுவே பயணித்தவர்களுக்கு இந்த உண்மை நன்பு புரியும்.தேசிய நெடுஞ்சாலை 83, கோவையையும் பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம் திருவாரூர் வழியாக, நாகப்பட்டினத்தையும் இணைக்கிறது.
பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை, 36 கி.மீ. தூரத்துக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.கடந்த, 2019ன் பிற்பகுதியில், திட்டப்பணிகள் நிறைவுபெற்று, தற்போது, முழு அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்த 36 கி.மீ. தூரத்தில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, சாலையோர மரங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் உள்ளது.

விரிவாக்கத்துக்காக, சாலையோர மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அதன்பிறகு, புதிய மரக்கன்றுகள் நடப்படவில்லை. இருபுறங்களிலும் குறைந்தது, 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடலாம் என்பதால் பருவ மழையை பயன்படுத்தலாம் என்கின்றனர் பசுமை ஆர்வலர்கள்.

பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது:சாலை விரிவாக்கத்துக்கு பிறகு, மரக்கன்றுகள் நடப்படும் என எதிர்பார்த்தோம்; நடவில்லை. தற்போது, பருவமழை துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நட்டு பசுமைக்கு புத்துயிர் தரலாம். நெடுஞ்சாலை துறையினர் மரக்கன்றுகளை நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். காற்று, மழைக்கு தாங்காமல், எளிதில் உடையக்கூடிய மரக்கன்றுகளை தவிர்த்து, எல்லா சூழல்களையும் தாக்குப்பிடிக்கும் மரங்களை நடவேண்டும்.
இதற்காக, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பெறலாம். கோவையில் ஏராளமான சூழலியல் அமைப்புகள், இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றன. அந்த அமைப்புகளுடன் இணைந்து, மரக்கன்றுகளை நடலாம். மின் வாரியம் உள்ளிட்ட துறைகளையும் ஆலோசித்து, எதிர்காலத்தில் இடையூறு ஏற்படாத வகையில் மரக்கன்று நட வேண்டும். பெரிய மர வகைகளை வளர்க்க முடியாத இடங்களில், உயரம் குறைவான, குறுமர வகைகளை நடலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-202111:06:58 IST Report Abuse
Ram Pollachi மரத்தை எங்கு வைக்க இடம் இருக்கா? வெள்ளையன் சாலை ஓரத்தில் புளிய மரம் வைத்து வருடம் இரண்டு முறை எடுத்து அரசுக்கு வருவாய் சேர்த்தார்கள். நாம் மரத்தை வெட்டி புளி விலையை ஏற்றிவிட்டோம். இப்போது நாம் கண்டுபிடித்த மரம் வேகமாக வளரும் பிராண வாயு தராது பிராணனை வாங்கி விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X