சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021
Share
Advertisement
ஊட்டி : நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், ஆங்காங்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கியது. எனினும் ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் அவலாஞ்சியில் 10 செ.மீ., அப்பர் பவானியில் 7.3 செ.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரி 2 செ.மீ., மழை
நீலகிரி, பலத்த காற்று, மழை, போக்குவரத்து, பாதிப்பு

ஊட்டி : நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், ஆங்காங்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கியது. எனினும் ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் அவலாஞ்சியில் 10 செ.மீ., அப்பர் பவானியில் 7.3 செ.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரி 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


மின் உற்பத்திக்கு தடை


மஞ்சூர் - -கிண்ணக்கொரை சாலையில் கேரிங்டன் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ராட்சத மரங்கள் விழுந்தன. நெடுஞ்சாலை துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர். ஊட்டி - -கூடலுார் சாலையில் பைக்காரா அருகே அடுத்தடுத்து நான்கு மரங்கள் விழுந்தன. தீயணைப்பு துறையினர் மரங்களை அப்புறப்படுத்தினர்.கோத்தகிரி -- ஊட்டி சாலையில் பாக்கிய நகர் பகுதியில் அதிகாலை 3:00 மணிக்கு சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி குந்தா அணைக்கு வினாடிக்கு 200 கன அடி நீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 89 அடிக்கு, 88.5 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங்களுக்கு ராட்சத குழாயில் மின் உற்பத்திக்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''மழையால் பாதிக்கப்படுவோருக்காக, மாவட்டத்தில் 436 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் தங்குவதற்கு வரவில்லை. பாதிப்பு இருந்தால் அந்தந்த பகுதி வருவாய் துறையினரை அணுகலாம்'' என்றார்.


latest tamil news




நீர்வரத்து அதிகரிப்பு


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட காட்டாற்றுகள் வாயிலாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த இரு நாட்களில் அணையின் நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. அணையில் மொத்தமுள்ள 90 அடியில் நேற்று காலை நிலவரப்படி 69.39 அடி நீர்மட்டம் இருந்தது. திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில், நேற்று காலை நிலவரப்படி 41.36 அடிக்கு நீர் மட்டம் இருந்தது.


கொடைக்கானலில் சூறைக்காற்று


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கொடலங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீட்டுக் கூரைகள் துாக்கி வீசப்பட்டன. 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்தன. வத்தலகுண்டு -- பண்ணைக்காடு - தாண்டிக்குடி ரோட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன.

சித்தரேவு, தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் ரோட்டில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தோட்டங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள், சவ்சவ் பந்தல், அவரை, பீன்ஸ், மலை வாழை, ஆரஞ்சு பயிர்கள் சேதமடைந்தன. கொடைக்கானல் -- பாச்சலுார் உயர் மின் அழுத்த பாதையில் மரங்கள் முறிந்து, மின் 'சப்ளை' பாதித்தது. வருவாய்த் துறை, உள்ளாட்சி, நெடுஞ்சாலைத் துறையினர் சரிசெய்த பின் போக்குவரத்து சீரானது.

விவசாயி முனியசாமி கூறுகையில், ''நள்ளிரவில் பலத்த காற்று வீசியது. என்னவென்று அறியும் முன், வீட்டின் மீது மரம் விழுந்தது'' என்றார்.

விவசாயி சதாசிவம் கூறுகையில், ''சூறைக்காற்றுக்கு மிளகு, மலை வாழை, காபி பயிர்கள் சேதம் அடைந்தன. கஜா புயலுக்கு பின் இது மிகப்பெரிய இழப்பாகும். அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X