பொது செய்தி

இந்தியா

20 லட்சம் கணக்குகளை முடக்கியது 'வாட்ஸ் ஆப்'

Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தள நிறுவனம், கடந்த ஒரு மாதத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது.மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், மே 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளோம்.
WhatsApp, bans, 20 lakh, Indian users

புதுடில்லி : 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தள நிறுவனம், கடந்த ஒரு மாதத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது.

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், மே 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளோம். தேவையற்ற மற்றும் வன்முறையை துாண்டும் தகவல்கள் பரிமாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில நடவடிக்கைகள் எடுத்தோம்.


latest tamil news


அதன்படி மே 15 - ஜூன் 15 வரை நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தேவையற்ற, வன்முறையை துாண்டும் வகையிலான தகவல்கள் பரிமாற்றப்பட்ட 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கினோம். சர்வதேச அளவில் மாதந்தோறும் இதுபோல் எட்டு லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கி வருகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
16-ஜூலை-202111:39:37 IST Report Abuse
vpurushothaman முடக்குங்கு. பலரின் "முடக்கு வாதத்" திற்கு முடிவு கட்டட்டும்.
Rate this:
Cancel
jeyakumar - MADURAI,இந்தியா
16-ஜூலை-202109:50:19 IST Report Abuse
jeyakumar இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படும் வாட்சப் க்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X