அமெரிக்கா 'விசா' கெடுபிடி: கனடா செல்லும் இந்தியர்கள்

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அரசின் 'விசா' கெடுபிடிகள் காரணமாக, அங்குள்ள இந்திய நிபுணர்கள் கனடாவில் குடியேறி வருவதாக அந்நாட்டு பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க கொள்கைக்கான தேசிய கழகத்தின் செயல் இயக்குனர் ஸ்டூவர்ட் ஆண்டர்சன், குடியேற்றம் மற்றும் குடியுரிமை குறித்த ஆய்வறிக்கையை பார்லி., நீதிக் குழுவில் தாக்கல் செய்துள்ளார். அதில்
Indian talent, moving, Canada, H1B visa policy

வாஷிங்டன் : அமெரிக்க அரசின் 'விசா' கெடுபிடிகள் காரணமாக, அங்குள்ள இந்திய நிபுணர்கள் கனடாவில் குடியேறி வருவதாக அந்நாட்டு பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க கொள்கைக்கான தேசிய கழகத்தின் செயல் இயக்குனர் ஸ்டூவர்ட் ஆண்டர்சன், குடியேற்றம் மற்றும் குடியுரிமை குறித்த ஆய்வறிக்கையை பார்லி., நீதிக் குழுவில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்கா, காலத்திற்கு ஒவ்வாத குடியேற்றக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக, வேலை அடிப்படையில் குடியுரிமை தரும் 'கிரீன் கார்டு' கிடைக்காமல் 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் உள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு நிபுணர்களை பணிக்கு அமர்த்துவதற்கான, 'எச் - 1பி' விசா பெறுவதிலும் பல தடைகள் உள்ளன.இந்தாண்டு மார்ச் நிலவரப்படி, மூன்று லட்சத்திற்கும் அதிகமான எச் - 1பி விசா விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் ஆண்டுக்கு 85 ஆயிரம் விசாக்கள் தான் வழங்கப்படுகின்றன. இதனால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிபுணர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்த முடியாத நிலை உள்ளது.


latest tamil newsஇதுபோன்ற காரணங்களால் அமெரிக்காவில் பணியாற்றும் திறமையான இந்திய வல்லுனர்கள், கனடாவுக்கு குடியேறி வருகின்றனர். இதற்கு, கனடாவின் தாராள விசா கொள்கையும் காரணம்.இதே நிலை நீடித்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான இந்திய வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். அமெரிக்க அரசு விரைவாக செயல்பட்டு, இந்திய வல்லுனர்கள் கனடா செல்வதை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும்.

தவறினால் 2030ல், இந்திய வல்லுனர்களுக்கான பற்றாக்குறை அதிகரிக்கும். அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள வெளிநாட்டு வல்லுனர்களின் குடியேற்றத்திற்கு உதவும் வகையில் கொள்கைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
16-ஜூலை-202116:25:49 IST Report Abuse
kalyanasundaram India must recognize efficient people only irrespective of any e . Reservations must be avoided for its achievements and progress. All third rate politicians as well letters pad parties must be banned.
Rate this:
Cancel
16-ஜூலை-202115:46:35 IST Report Abuse
அப்புசாமி மொத்தத்தில் இந்தியாவில் டீக்கடை, பகோடா கடை வெக்கத்தான் முடியும். படிச்சவங்களுக்கு அமெரிக்கா, கனடான்னு 2 கோடி வேலைத்திட்டத்தின் கீழ் கிடைக்குது. ஆத்மநிர்பரா வெற்றி. ஜெய் பகோடா...
Rate this:
Sethu - chennai,இந்தியா
16-ஜூலை-202116:14:13 IST Report Abuse
Sethuவந்துட்டாருயா ஆப்புசாமி...
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-ஜூலை-202109:26:19 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அருமை. பிரிவினைவாதிகள், தேசத்துரோகிகள் சுலபமாக கனடாவில் நுழையலாம். அவர்களுக்கு இடமளித்து அந்தநாடு பலனடைகிறது. இவர்களுக்கும் இடமளித்தால் செல்பவர்கள் கிரிமினல் ஆவார்கள்
Rate this:
K BALASUBRAMANIAN - sattur,இந்தியா
16-ஜூலை-202114:32:35 IST Report Abuse
K BALASUBRAMANIANஇந்த கட்டுரை முக்கியமாக ஐ டீ வேலை செய்பவர்களை பற்றியே எழுதப்பட்டுள்ளது. இதில் தீவிரவாதிகள் எங்கிருந்து வந்து விட்டனர். தர்மர் போல பாருங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X