புதுடில்லி: 'கொரோனா மூன்றாவதுஅலை அடுத்த மாத இறுதியில் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் முதல் இரண்டு அலைகளைப் போல அதி தீவிரமாக இருக்காது' என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) கூறியுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை பரவலாக உள்ளது. இந்நிலையில் மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சின் தொற்று நோய் பிரிவின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளதாவது: முதல் இரண்டு அலைகளின் போது கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கக் கூடியதாக புதிய உருமாறிய வைரஸ் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்க முடியாத அதே நேரத்தில் வேகமாக பரவக் கூடியதாக இந்த வைரஸ் உள்ளது. அவசரகதியில் கட்டுப்பாடுகளை மாநிலங்கள் விலக்கிக் கொள்கின்றன. இதனால் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆக., இறுதியில் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் முதல் இரண்டு அலைகளைப் போல தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE