தமிழகத்தின் நகர்ப்புறங்களில் இரண்டு மடங்கான வேலையின்மை

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
ஒரே ஆண்டுக்குள் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் வேலையின்மை பெருகியுள்ளதை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.'இந்தியாவில் கொரோனாவுக்கு பிந்தைய வேலைவாய்ப்புச் சூழல்' என்ற தலைப்பில் பிபேக் தேப்ராய் மற்றும் சிராக் துதானி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இருவரும் முறையே பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும்
unemployment, வேலையின்மை, தமிழகம், கிராமப்புறம், நகர்ப்புறம்

ஒரே ஆண்டுக்குள் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் வேலையின்மை பெருகியுள்ளதை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

'இந்தியாவில் கொரோனாவுக்கு பிந்தைய வேலைவாய்ப்புச் சூழல்' என்ற தலைப்பில் பிபேக் தேப்ராய் மற்றும் சிராக் துதானி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இருவரும் முறையே பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் துணை ஆலோசகர். ஒவ்வொரு மாநிலத்தின் வேலைவாய்ப்பு சூழலை நகரம் கிராமம் ஆண்கள் பெண்கள் வேலையின்மையின் அளவு தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வயது வாரியான வகைப்பாடுகள் போன்ற வரையறைகளின் கீழ் தொகுத்து அளித்துள்ளனர்.


latest tamil newsஇதில் தமிழகத்தை பற்றிய புள்ளிவிபரங்கள் தான் கவலையை அதிகப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் 2020 பிப்ரவரி முதல் வேலையின்மையின் அளவு உயர ஆரம்பித்தது. ஏப்ரலில் கிராமப்புறங்களில் வேலையின்மை 53.19 சதவீதமாக உச்சத்தை தொட்டது.அதே சமயத்தில் தேசிய அளவிலான வேலையின்மை 22.19 சதவீதமாக இருந்தது. அதாவது தமிழக கிராமப்புற வேலையின்மை தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகம்.அதன்பின் 100 நாள் வேலைத் திட்டம் தந்த வேலைகளால் நிலைமை சீரடைந்தது.

ஜூலை 2020ல் கிராமப்புற வேலையின்மை 4.53 சதவீதமாக சரிந்தது. கடந்த 2020ல் தான் இப்படியென்றால் 2021ல் நிலைமை மாறியதா?கடந்த ௨௦௨௦ பிப்ரவரியில் 1.17 சதவீதமாக இருந்த கிராமப்புற வேலையின்மை 2021 பிப்ரவரியில் 2.7 சதவீதமாக உயர்ந்தது. நகர்ப்புறங்களின் கதை தனியானது. 2020 ஏப்ரலில் 45.55 சதவீத அளவுக்கு வேலையின்மை உயர்ந்தது. இதுவும் தேசிய சராசரியைவிட கணிசமாக உயர்ந்தே இருந்தது.இங்கே இன்னும் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.

2020 ஏப்ரலில் உச்சம் தொட்ட வேலையின்மை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆகஸ்ட் மாதம் வரை ஆனது. மார்ச் மாதத்தில் இருந்தே துவங்கிய வேலையின்மையின் பாதிப்பு குறைவதற்கு ஆறு மாதங்கள் ஆகியுள்ளன.வேறு சில மாநிலங்களில் வேலையின்மையின் பாதிப்பு நான்கே மாதங்களில் சரியாகி அதாவது ஜூன் மாதமே இயல்பு நிலைக்குத் திரும்பியதாக இந்தப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

அடுத்த விஷயம் இன்னும் முக்கியமானது. நகர்ப்புற வேலையின்மை 2021 பிப். 21ல் 7.27 சதவீதத்தைத் தொட்டது. இது 2020பிப். உடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகம்.அதாவது தொழில்கள் மீண்டு விட்டன வேலைவாய்ப்புகள் பெருகும் என்று கருதப்பட்ட நிலையில் தமிழக நகர்ப்புறங்களில் வேலையின்மை அதிகரித்துஉள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.

நாடெங்கும் உள்ளது போன்றே தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் இளைஞர்கள் தான் வேலையின்மையால் அவதிப்பட்டனர். குறிப்பாக 20 - 24 வயது வரையுள்ள இளைஞர்கள்.கடந்த பிப்.யில் பட்டம் பெற்றவர்களும் அதற்கு மேலே படித்தவர்களும் தான் இதரக் கல்வித் தகுதியுடையவர்களை விட அதிக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 16.78 சதவீதத்தினர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு மே மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையின்மையின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே இருக்கும் என்று கணிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-202116:46:41 IST Report Abuse
தமிழவேல் தேர்தல்தான் முடிஞ்சுட்டுதே... இனிமேல் ஒன்னு ஒண்ணா வரும். ஆனா, அந்த ரெண்டு தலையும் இன்னைக்கு சிரிச்சிகிட்டு இருக்கும்.
Rate this:
Cancel
ராஜா - Chennai,இந்தியா
16-ஜூலை-202115:47:42 IST Report Abuse
ராஜா இன்னும் இருப்பதை எல்லாம் இலவசமாக கொடுத்துவிட்டு வேலைக்கு போக சொல்லுங்கள் தமிழ்நாடு விளங்கீடும். எபோது பார்த்தாலும் தேவையில்லாத போராட்டம், புரட்சி, வெங்காயம் என்று பேசிக்கொண்டு இருந்ததால் எந்த பெரு நிறுவனங்களும் தமிழ்நாட்டுக்கு வர தயங்குகின்றன. அப்படியே வந்தாலும் இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் கேட்கும் கமிஷனை பார்த்து தலை சுத்தி விடுகிறது போலும். அதிவிரைவில் தமிழ்நாடும் மேற்கு வங்கம் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் வரிசையில் சேர்ந்து விடும். அப்புறம் இங்கிருக்கும் மறத்தமிழர்கள் பஞ்சம் பிழைக்க வடநாடுகளுக்கு சென்று இன்று பாணி பூரிக்காரன் என்று ஏளனம் செய்தவர்களை கட்டிப்பிடித்து தூங்கும் நிலைதான் வரும்.
Rate this:
Cancel
16-ஜூலை-202115:40:32 IST Report Abuse
அப்புசாமி 2 கோடி வேலை வாய்ப்புத் திட்டத்தில் தமிழகம் வேலைவாய்ப்புகள் தரப்படாமல் வஞ்சிக்கப் படுகிறது. உடனடியா தமிழகத்துக்கு 12 கோடி வேலைகள் ஒதுக்கப்படணும்னு தளபதியார் மோடி ஐயாவுக்கு கடிதம் எழுதணும். அனைத்துக்கட்சி குழுவினரை டில்லிக்கு அனுப்பி வலியுறுத்தணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X